செவ்வாய், 30 அக்டோபர், 2012

விகடன் இணையதளத்தின் இடிந்தகரை போராளிகளின் கதை!...


டல், மீன், உப்புக்காற்று இவற்றை மட்டுமே மையமாக வைத்துச் சுழன்றுகொண்டிருந்த இடிந்தகரை மக்களை இன்று உலக மீடியாக்களே சுற்றிவருகிறது. தேர்தல் நேரக் கூட்டணி அறிவிப்பைக் கேட்கக் காத்திருக்கும் கட்சிகளின் தொண்டர்களைப்போல உதயகுமாரின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்புக்காக இடிந்தகரை தேவாலயத்தின் முன்பு தினமும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் காத்துக்கிடக்கிறார்கள்.
''கூடங்குளத்தில் மனைவியின் தலைப் பிரசவத்துக்காக இட்லி கடையைப் பூட்டிவிட்டுச் சென்றிருக்கும் கந்தசாமியின் கடை எப்போது திறக்கும்?'' என்று கேட்டால், '' 'இரண்டே நாளில் திறந்திடுவோம்’னுதான் நாராயணசாமி சொல்வாரு'' என்று இடிந்தகரை மக்களே காமெடி செய்யும் அளவுக்குத்தான் அங்கே அரசியல்வாதிகளுக்கு மரியாதை. அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களும் வெட்டிச் சாய்க்கப்பட்டு, பஞ்சாயத்து அலுவலகமும் சூறையாடப்பட்ட நிலையில் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் உதயகுமார் மட்டுமே.
உதயகுமாருக்கு அப்பாதான் இன்ஸ்பிரேஷன்!
உதயகுமாரின்  அப்பா பரமார்த்தலிங்கம் தி.க., தி.மு.க. இயக்கங்களில் இருந்தவர். தொடக்க காலத்தில் ஆவடி ரயில் நிலையத்தில் ஃபோர்மேனாக இருந்தவர் பின்னாளில் நாகர்கோவில் தொழில் பயிற்சி நிலையத்தில் வெல்டிங் இன்ஸ்பெக்டராகவும் பணிபுரிந்தார். அவர் பணி செய்த இடங்களில் எல்லாம் மனமகிழ் மன்றங்களை ஆரம்பிப்பது, சமூகப் பணிகளை முன்னெடுப்பது போன்றவற்றில் அதீத ஆர்வம் கொண்டவராக இருந்தார். நாகர்கோவிலில் இசங்கன்விளை பகுதியில் புதிதாகச் சாராயக்கடை வர இருந்தபோது உண்ணாவிரதம் இருந்து அதை முறியடித்தார். இப்போதும் போராட்ட குணத்துக்கும் மனோ தைரியத்துக்கும் தன் அப்பாதான் இன்ஸ்பிரேஷன் என்று அடிக்கடிச் சொல்வார் உதயகுமார். வீட்டில் இருக்கும்போது தினமும் இரவு 3 மணிவரை புத்தகங்களை வாசிப்பது உதயகுமாரின் வழக்கம். உதயகுமாரை உதயா என்றுதான் அழைப்பார் அவருடைய அம்மா பொன்மணி. இவர் சமூகநலத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அணு உலைக்கு எதிராக...!
துவக்கக் கல்வியை இசங்கன்விளையிலும் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை நாகர்கோவில் டி.வி.டி. மேல்நிலைப் பள்ளியிலும் பயின்ற உதயகுமார், நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம், கேரள பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம் படித்துவிட்டு எத்தியோப்பியாவில் ஆசிரியராக இருந்தார். அதன்பின் அமெரிக்கா சென்றவர் அங்கும் ஆசிரியராக பணிபுரிந்தார். அவ்வப்போது விடுமுறைக்குவரும் உதயகுமார் குடும்பத்தினருடன் செலவிட்ட நேரத்தைவிட அணு உலைக்கு எதிராகப் பிரசாரம் செய்ய செலவிட்ட நேரமே அதிகம். சிறுவயதில் அவரை மிகவும் பாசத்துடன் அரவணைத்த தாத்தா, பாட்டியைப் புற்றுநோய்க்குப் பலி கொடுத்த சம்பவம்தான் அணு உலைக்கு எதிரான போராளியாக அவரை உருவாக்கியதாம். கல்லூரியில் படிக்கும் காலகட்டத்திலேயே 'எறும்புகள்’ என்னும் இலக்கிய அமைப்பையும் பொதுப் பிரச்னைகள் பற்றி அலசுவதற்கு 'நியூ இந்தியா மூவ்மெண்ட்’ என்ற அமைப்பையும் நடத்தி இருக்கிறார். அதன் ஒரு கட்டமாகத்தான் அணு உலை குறித்த துண்டறிக்கைகளை விநியோகம் செய்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, சமத்துவ சமுதாய இயக்கத்தின் இயக்குனர் டேவிட்டுடன் தொடர்பு ஏற்பட்டுக் கடந்த 2001-ம் ஆண்டு அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைத் தொடங்கியவர் தன் வாழ்நாளின் முழுநேரத்தையும் அணு உலைகளுக்கு எதிரான செயல்பாட்டுக்கே அர்ப்பணித்துவிட்டார்.
கூடங்குளம் போராட்டத்தில் உதயகுமாருக்குத் தோளோடு தோள்கொடுத்துப் போராட்டத்துக்கு வலுசேர்ப்பது புஸ்பராயன், முகிலன், மை.பா.ஜேசுராஜ், ஜெயக்குமார் உள்ளிட்ட நால்வர் படைதான்.
தொடக்கத்தில் அணு உலையை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்கள் பலரும் குடும்பச் சூழல், அரசு கொடுத்த தொடர் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் ஒதுங்கிய நிலையிலும் இப்போதும் துணிவுடன் களத்தில் நின்று போராட்டத்தைச் செதுக்குவது இந்தப் படைதான். இவர்களைப்பற்றி  குட்டி புரொஃபைல் இங்கே...
கூடங்குளத்துக்கு குட்பை சொன்னால்தான் இனி கொங்கு!
ஈரோடு மாவட்டம் சென்னிமலை  பகுதியைச் சேர்ந்தவர் முகிலன். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கில்டிப்ளமோ படித்தவருக்குப் பொதுப்பணித் துறையில் வேலையும் கிடைக்க, அதை உதறித் தள்ளிவிட்டு சமூகப் பணிக்கு வந்துவிட்டார். ஆரம்பகட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத்தின் மாணவர் அணி அமைப்பாளராகவும் தமிழ் ஈழ விடுதலை ஆதரவுக்குரல் இயக்கம் உள்பட பல இயக்கங்களில் இருந்தவர் சமூகப் பணிக்காக 16 வயதிலேயே தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். அதன்பின் தமிழ்நாடு மார்க்சிய லெலினிய கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டவர் தீண்டாமை, மது, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், ஆபாசம் இவற்றை எதிர்த்துத் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி இருக்கிறார்.  
1991-ல் அப்போதைய அ.தி.மு.க  அரசு இலங்கை அகதிகளைத் தமிழகத்தை விட்டு வெளியேற்ற முனைந்தபோது, அதை எதிர்த்து ஈரோட்டில் தொடர்ந்து பொதுக் கூட்டங்களை நடத்தினார் முகிலன். அவரை தேசத் துரோக வழக்கில் கைது செய்தது அப்போதைய ஜெ அரசு. அதன்பின் பல்வேறு விவசாய மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளை முன்வைத்து பலகட்டப் போராட்டங்களை நடத்தி விவசாயிகளிடையே புரட்சியை விதைத்திருக்கிறார். அனைத்து விவசாயிகள் மற்றும் சமூக நல இயக்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளரான முகிலன், நொய்யல் ஆறு பாதுகாப்பு, சிப்காட் ஆலைக் கழிவுக்கு எதிர்ப்பு, ஈ.மு கோழிக்கு எதிரான போராட்டம், ஆறுகளில் சாயப்பட்டறைக் கழிவுகளைக் கலப்பதற்கு எதிர்ப்பு, சென்னிமலை விசைத் தறி, கைத்தறித் தொழிலாளர்களின் மறுவாழ்வு இவற்றுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு விவசாய பிரச்னைகளுக்காகப் போராடி சிறைக்குச்சென்று இருக்கிறார். 2009-ல் ஈழப் பிரச்னைக்காகத் தாயகத்தில் 25 பெண்கள் உண்ணாவிரதம் இருந்ததற்கு ஆதரவு தெரிவிக்கவந்த முகிலன் அங்கேதான் உதயகுமாரைச் முதன்முதலாகச் சந்தித்திருக்கிறார். சுற்றுச்சூழல் ஆர்வலரான முகிலன் அதன்பின் அணு உலைக்கு எதிரான போராட்டத்திலும் முனைப்பு காட்ட ஆரம்பித்தார். ''தனி நலனை குடும்ப நலனுக்கு உட்படுத்தியும் குடும்ப நலனை சமுதாய நலனுக்கு உட்படுத்தியும் வாழ்வோம் என உறுதி ஏற்கிறோம்''  என்று சீர்திருத்த திருமணம் செய்துகொண்ட முகிலனின் மனைவி  பெயர் பூங்கொடி.
மதபோதகரிலிருந்து மக்கள் பணிக்கு!
தூத்துக்குடியைச் சேர்ந்த புஸ்பராயன் தேவாலயத்தில் மதபோதகராக இருந்தவர். ஆலயப் பணிக்கு இணையானது மக்கள் பணி என்று கடல், கடல் சார்ந்த நலப் பணிகளுக்காக வெள்ளை உடையைத் துறந்தவர். மன்னார் வளைகுடா பாதுகாப்புக்காகத் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியதிலும் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. இறால் பண்ணை, இரசாயனத் தொழிற்சாலையின் கழிவுகளும், தூத்துக்குடி நகரின் கழிவுகளும் கடலில் கலப்பதனால் அங்குள்ள 3,200 அரியவகை கடல்வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பை ஏற்படும் என்று பல மீனவ கிராமங்களுக்குச் சென்று முழங்கியவர். கன்னியாகுமரி முதல் இராமேஸ்வரம் வரை 21 பவளப்பாறை தீவுகள் இருக்கின்றன. அவற்றைச் சமூக விரோதிகள் வெட்டி எடுப்பதைத் தடுக்க, வனத் துறையோடு இணைந்து பணி செய்தவர். மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி பகுதியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டு தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துத் தொடர்ந்து போராடிவருபவர்.
கடற்கரை ஓரங்களில் மணல் எடுப்பதால் கடல் அரிப்பு ஏற்பட்டு, மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனத் தொடர்ந்து போராடிவருபவர். 1996-ல் திருநெல்வேலி மாவட்டம் பெருமணல் பகுதியில் மணல் எடுப்பதைக் கண்டித்து நடத்தப்பட்ட கூட்டத்தில் காவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டாராம். 1996-ல் அணு உலைத்தடுப்பு இயக்கத்தைத் துவங்கி ராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி வரையுள்ள கடலோரக் கிராமங்களுக்குச் சென்று அணு உலைக்கு எதிராகப் பிரசாரம் செய்தார். சேது சமுத்திர திட்ட எதிர்ப்பு, பவளப் பாறைகள் பாதுகாப்பு என தொடர்ந்து மீனவ மக்களின் பிரச்னைகளுக்காகப் போராடியவர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11-ல் இருந்தே இடிந்தகரை வாசியாகிவிட்டார்.
தமிழர் நலன்தான் முக்கியம்!
திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம்தான் மை.பா.ஜேசுராஜின் பூர்வீகம். தத்துவ இயல், இறையியல்படித்துவிட்டு ரோமன் கத்தோலிக்கச் திருச்சபையில் பங்குத் தந்தையாக இருப்பவர் தமிழர் நலனையே குறிக்கோளாகக்கொண்டு அதற்கு எதிரான விஷயங்களுக்குத் தொடர்ந்து குரல் கொடுக்கிறார். இடிந்தகரை போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவருபவர்கள் யாராக இருந்தாலும் ஆதரவு தெரிவிப்பவர். 'தமிழர் நலம்தான் முக்கியம்ண்ணே’ என்று சிலாகிப்பாராம். தமிழர் களம் அமைப்பின் தென் மண்டல பொறுப்பாளராக  இருக்கும் இவர் கூடங்குளம் அணுஉலை செயல்பட்டால் தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கடந்த 1999-ம் ஆண்டு முதல், டேவிட் உடன் இணைந்து அணு உலைகளுக்கு எதிராகக் களம் கண்டுவரும் மை.பா.ஜேசுராஜ் மக்கள் பணிக்காக திருமணமே செய்துகொள்ளவில்லை.
ஜெயக்குமார்!
இடிந்தகரை தேவாலயத்தில் பங்குத் தந்தையாக இருப்பவர் ஜெயக்குமார்.இடிந்தகரை கிராமத்தில் தேவாலயத்தின் முன்பாகத் திரளான மக்களைத்  திரட்டி அணு உலைக்கு எதிராகச் சாட்டை சுழற்றியதில் இவருக்கும் முக்கிய பங்கு உண்டு.அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை நடந்துவிடாத வகையில் மீனவ மக்களைத் தொடர்ந்து அமைதிப்படுத்துவதும் இவர்தானாம்.

ஒரு நல்ல அரசியல்வாதி அடுத்த  தேர்தலைப் பற்றிச் சிந்திப்பார். நல்ல தலைவன்தான்  அடுத்த தலைமுறையைப்பற்றிச் சிந்திப்பான். இடிந்தகரை மக்களுக்கு நல்ல தலைவர்கள் கிடைத்திருக்கிறார்கள். அரசியல்வாதிகளைப் பற்றிச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
-  என்.சுவாமிநாதன்.          
படங்கள்: ரா.ராம்குமார். 

வியாழன், 7 ஜூன், 2012

பிட் பிட் பிட்டுகள்..... 3

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் அபூர்வமான நாள்அந்த நாள் மாமனிதர் மொரார்ஜி தேசாயின் பிறந்த நாள்எனும்போது அந்நாளுக்கான முக்கியத்துவமும் மரியாதையும் இன்னும் கூடி விடுகிறது.,,,.1977-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி, 81வயதான மொரார்ஜி தேசாய் இந்தியாவின் நான்காவது பிரதமராகப் பொறுப்பேற்றார்பதவி ஏற்றவுடன் அவசரநிலைக்காலக்கொடுமைகளை நீக்கிஜனநாயகத்தை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். அடிப்படை  உரிமைகள்,  பத்திரிகைச்சுதந்திரம்அரசியல் கட்சிகளின் சுதந்திரமான செயல்பாடு மற்றும் தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை மீட்டெடுத்தார். 44-வது அரசியல்சட்டத் திருத்தத்தின் மூலம் இந்திய அரசியலமைப்புக்கு ஏற்பட்ட  ஊறுகளைக் களைந்தார்.   857 நாள்கள் மட்டுமே ஆட்சியில்இருந்தாலும்அவருடைய ஆட்சிக்காலம் கடும் பஞ்சங்களையும்,   இயற்கைச் சீற்றங்கள் பலவற்றைவும் எதிர்கொள்ளவேண்டியிருந்தபோதிலும்  மக்கள் எந்த வகையிலும் இன்னல்  அனுபவிக்காவண்ணம்  மிகச்சிறப்பானநிர்வாகத் திறமை மிகுந்த,ஊழலற்றநேர்மையானதூய்மையான ஆட்சியை மக்களுக்குத் தந்தார்.இந்தியாவின் உயரிய விருதான "பாரத ரத்னா'வையும்அதற்குஇணையான பாகிஸ்தானின் "நிஷான்--பாகிஸ்தான்'   என்ற  விருதையும்  பெற்ற ஒரே இந்தியர் மொரார்ஜி தேசாய்............. தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது ; யாவரும் கவனிக்கவில்லைஎனில் உண்மை பொய் ஆகாதுமக்கள் துணையின்றியும் உண்மை நிலைத்து நிற்கும்தன்மையுடையதுமகாத்மா காந்தி........................... நித்திரையில் இருக்கும் தமிழா!சித்திரை இல்லை உனக்குப்புத்தாண்டு அண்டிப்பிழைக்கவந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததேஅறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்..                தரணி ஆண்டதமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு...பாவேந்தர் பாரதிதாசன்........கருணாநிதியைப் பற்றி, ஒரு கருத்து சொல்வர். அவர் எதிர்க்கட்சியிலிருந்தால், தமிழ் மக்கள் நலனுக்காக ஓங்கி குரல் கொடுப்பார். ஆனால், ஆட்சிக்கு வந்து விட்டால், தம் மக்கள் நலனுக்காக மட்டுமே செயல்படுவார். இறுதிக்கட்ட போர், 2009ல் ஆரம்பித்திருந்தது, ராஜபக்ஷே அரசு. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, ஆயிரக்கணக்கில் தமிழர்களை கொன்று குவித்தது. இந்திய , அரசின் ஆதரவுடனும், மறைமுக ஆயுத  உதவிகளுடனும் தான், தமிழர்களுக்கெதிரான இந்த யுத்தம் நடத்தப்பட்டது. இந்த வேளையில், தமிழகத்தில் ஆட்சியிலிருந்த கருணாநிதி, தனது ஆதரவுடன் மத்தியில் ஆட்சியிலிருந்த பிரதமருக்கும், சோனியாவிற்கும் தகுந்த முறையில் நிர்பந்தங்கள் கொடுத்திருந்தால், போரின் வேகம் குறைந்திருக்கும். இலங்கையில் போர் நிறுத்தப்படாவிட்டால், மத்திய அரசுக்கான ஆதரவு வாபஸ் பெறப்படும் என கூறி, அதற்கான நடவடிக்கைகளில் கருணாநிதி இறங்கியிருந்தால், பதறிப்போய் சோனியா, இலங்கையை போர் நிறுத்தம் செய்ய வைத்திருப்பார். ஆனால், நான்கு மணி நேர உண்ணாவிரதம், தனது கட்சி எம்.பி.,க்களிடம் ராஜினாமா கடிதங்களை வாங்கி, அதை சபாநாயகருக்கு அனுப்பாமல் தானே வைத்துக் கொண்டது. என, கோமாளிக் கூத்துகளை நடத்திக் கொண்டிருந்தார் கருணாநிதி. தான் மற்றும் தனது குடும்பத்தினர்களும் பதவிகளில் நீடிக்க வேண்டும் என்பதற்காக, அவர் செய்த, இந்த தமிழின துரோகச் செயலால், ஐ.மு.கூ., அரசு தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காததோடு, ராஜபக்ஷே அரசுக்கு, மேலும் போருக்கான உதவிகளையும் செய்து வந்தது. முள்ளிவாய்க்கால் படுகொலையில், ஒரே நாளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது கருணாநிதி, தன் குடும்பத்தோடு டில்லிக்கு சென்று தன் மகன், மகள், பேரன், பேத்திகளுக்கு பணம் சம்பாதிக்க, வசதியான, மத்திய அரசின் இலாகாக்களை பெறுவதற்காக, சோனியாவோடு பேரம் நடத்திக் கொண்டிருந்தார். இலங்கையில் தமிழினம் அழிக்கப்பட்டது; இங்கே கருணாநிதி தன் குடும்பத்தினருக்கு பணம் கொழிக்கும் இலாகாக்களை பெறுவதில் வெற்றி பெற்றார். பதவி பறிபோன பின், வீட்டுக்குள் முடக்கப்பட்டிருக்கும் இந்த நாளில், தமிழர் பாசம் மீண்டும் பொங்கி வருகிறது.பதவி நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, அதிகார மயக்கத்தில் இன உணர்வை மறந்துவிட்ட கருணாநிதி, இப்போது தமிழீழ தாகம் கொண்டவராக மாறிவிட்டார். இன உணர்வும், தமிழ்ப் பற்றும் கொண்ட போராளியாய் கருணாநிதி இறுதிவரை இருக்க வேண்டும் என, தமிழக வாக்காளர்கள் விரும்பினால், மறந்தும், அவரை முதல்வராகவோ, தி.மு.க., ஆளும் கட்சியாகவோ மீண்டும் கொண்டு வர முயலக் கூடாது. ….கருணாநிதி, தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் என்ன லாபம் என்ற ஒரே நோக்கத்துடன் தான் திட்டம் தீட்டுவார்.  ……   யானைகளின் வாழ்வாதாரங்களை மனிதன் ஆக்கிரமித்து, அழிக்கத் துவங்கியதே, இன்று யானைகள் காடுகளை விட்டு ஊருக்குள் வருவதற்கு காரணம். மலைப் பிரதேசங்களை, சுயநல அரசியல்வாதிகள் கூறுபோட்டு ஆக்கிரமித்ததாலேயே, யானைகள் வழித் தடங்கள் மறைந்து, ஊருக்குள் இரை தேடி வர ஆரம்பித்தன. அரசியல் சாசனத்தின்படி, ஒரு மாநில அரசு, தன் மாநிலத்தில் வசிக்கும் மக்களையும், விலங்குகளையும் பராமரிக்கவும், பாதுகாப்பு அளிக்கவும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை இரண்டும் இன்று கடைபிடிக்கப்படாத காரணத்தால் தான், யானைகளால் மக்களுக்கும், மாவோயிஸ்டுகளால் அரசு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையூறுகள் ஏற்படுகின்றன.மாவோயிஸ்டுகள் ஊழல் அரசியல்வாதிகள் அதிகாரிகள்  மீது தங்களது கோபத்தை வெளிப்படுத்தினால், அதற்கு பொதுமக்கள் வருத்தப்பட மாட்டார்கள்.                       நீதிபதி. தீர்ப்பில் அவர், "ஊழல் என்பது விபசாரத்தை விட மோசமானது. விபசாரம் தனிமனித ஒழுக்கத்தைத் தான் பாதிக்கிறது. ஆனால், ஊழல் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒரே அளவில் சீரழித்து விடுகிறது. ஊழல், நாட்டுக்கு பகை. மனிதர்களை இது கோபத்துக்கு ஆளாக்குகிறது. இந்த சமூகம் ஊழலுக்கு எதிராக வெளிப்படையாக குரல் கொடுக்கிறது. ஆனால், தனிப்பட்ட முறையில் அதில் ஈடுபடுகிறது. சரியான நேரத்தில், சரியானவற்றை அடைவதற்கு கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்' என்று குறிப்பிட்டுள்ளார்…..  மக்களின் காலில் விழுந்து ஓட்டு பெற்று, எம்.எல்.ஏ., ஆனவர்கள், சட்டசபையில் மக்கள் சார்பில் பேசுவதில்லை. ஏதோ தங்கள் கட்சித் தலைமையால் தான் எம்.எல்.ஏ., ஆனதாக நினைத்துக் கொண்டு, சட்டசபையில் தங்கள் கட்சித் தலைவரைப் புகழ்ந்தும், எதிர்க்கட்சியினரை இகழ்ந்தும், கிடைக்கும் ஓரிரு நிமிடங்களையும் வீணடிக்கின்றனர்.அமைச்சர்கள் சினிமா பாடல்களை பாடுவதும், முதல்வர் அதை திருத்தியமைப்பதும், ரசிப்பதும் சட்டசபையின்,அன்றாட  நிகழ்ச்சி நிரலாகி விட்டது. சட்ட மசோதாக்கள் மீது, ஆழமான கருத்துரைகளை , நேர்மையுடன்   விவாதங்கள் செய்யப்பட்டு  மக்களிடம் நற்பெயரை எடுக்க முயற்சி  செய்யவும்.இல்லா விட்டால்  காலில் விழுந்தாலும்  ஓட்டு கண்டிப்பாக கிடைக்காது…………//////கியாஸ் பதிவு செய்ய தற்போது ஐ.வி.ஆர்.எஸ். முறையில் எஸ்.எம்.எஸ். அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஆங்கிலத்தில் /////IOC 22485990  15580  TO 8124024365    SMS……அனுப்பவும்….. ……………………………..காங்கிரஸ் செய்த சாதனை பாரிர் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்திய ரூபாய்.. 
 1947  ......1$ =1 Rs       1952  ....1$.=5 Rs       1991  ......1$=17 Rs       2000 .....45 Rs       2012  ........1$=56  Rs ………………… ………….மத்தியில் ஆளும் காங்., தலைமையின் கண் அசைவில், சி.பி.ஐ., செயல்புரிகிறது என்பது, சமீபத்தில் வெளிவந்த சி.பி.ஐ., கோர்ட்டின் தீர்ப்பின் மூலம் கண்கூடாக தெரிகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன், பா.ஜ., தலைவர் பங்காரு லட்சுமணன், வெறும் ஒரு லட்சம் லஞ்சம் பெற்றதற்கு, அவருடைய தள்ளாத வயதில், நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. தவறு செய்தவர் தண்டிக்கப்பட வேண்டியவர் தான். இந்த முடிவு சரியான முடிவே! ஆனால், ஏன் இதே நடைமுறையை, போபர்ஸ் வழக்கில் கடைபிடிக்கவில்லை? வலுவான ஆதாரங்கள் இருந்தும், குற்றவாளியான குவட்ரோச்சியை தப்பிக்கவிட்டது ஏன்? ஆட்சியாளர்களின் கண்டிப்பால், அவர்களை திருப்திப்படுத்த வேண்டி, வழக்கின் உண்மையை வெளிக் கொணராமல், வழக்கை முடித்தது ஏன்? இது எந்த வகையில் நியாயம்? இதேபால், "2ஜி' ஊழல் வழக்கில், நிறைய ஆதாரங்கள் இருந்தும், இது நாள்வரை, பலர் கைது செய்யப்படாமல் உள்ளனர். இவற்றை பார்க்கும்போது, "2ஜி' வழக்கும் ஒரு நாடகமாக அமைந்து, பூஜ்ஜிய வழக்காக மாறுமோ என்று அச்சமாக உள்ளது. இதுபோன்ற ஆட்சியாளர்கள் இருக்கும் வரை, இந்தியா வல்லரசாக மாறி, மக்களின் வாழ்வாதாரம் உயர்வது எப்போது? சாதாரண மக்களின் நியாயம் காப்பாற்றப்படுவது எப்போது? சி.பி.ஐ., எப்போது அதன் தனித்தன்மையுடன் செயல்படும்?............... பிரதான எதிர்க் கட்சியான பா.ஜ.க.வில் பிரதமர் பதவியை ஏற்க மூத்த தலைவர்களிடையே  போட்டி இருக்கிறது. ஒரு சில மாநிலங்களைத் தவிர பெரும்பாலான மாநிலங்களில் அந்தக் கட்சிக்கு செல்வாக்கு இல்லை.காங்கிரஸ் கட்சிக்கு அந்தந்த மாநிலங்களில் சிறிது பின்னடைவு ஏற்பட்டாலும் ஒட்டுமொத்தமாக காங்கிரசைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு நாடு முழுக்க செல்வாக்கு பெறும் நிலையில் எந்தக் கட்சியும் இல்லை.ஆகவே  2013-ம் ஆண்டிலேயே மக்களவைத் தேர்தலை நடத்திவிட காங்கிரஸ் முயல்வதாகத் கூறப்படுகிறது........ பி.எஸ்.என்.எல்., நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதன் நிதி ஆதாரம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக மத்திய அரசும், பி.எஸ்.என்.எல்., நிறுவனமும் அறிவித்துள்ளது. ஆனால், நிதி ஆதாரத்தையும், நிறுவனத்தையும் மேம்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை..ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியபோது அந்த துறையை லாபத்தில் செயல்பட அனைத்து அரசு அதிகாரிகளும், பொதுத்துறை அதிகாரிகளும், பிரநிதிநிதிகளும் ஏர் இந்தியாவில்தான் பயணம் செய்ய வேண்டும் என தெரிவித்தது. அதேபோல், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தையும் லாபத்தில் செயல்படவும், நிதி ஆதாரத்தை பெருக்கவும், மத்திய, மாநில அரசு பிரதிநிதிகள், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுடைய அனைத்து தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகளை பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் மட்டுமே பெற வேண்டும் என உத்தரவிட வேண்டும். இப்போது பொதுத்துறை நிறுவனங்கள்  தனியார் தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகளை உபயோகபடுத்தி வருகின்றன. ………..,   ……………… ஏமாற்றுவதால் எதையும் செய்து விட முடியாது. அன்பாலும், ஆர்வத்தாலும், ஆன்மிக சக்தியாலுமே பெரிய செயல்களை நிறைவேற்ற முடியும். ..... விவேகானந்தர்………….    ஆட்சி பீடத்தில் இருப்பவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினால், அது நியாயமானதாக இருந்தாலும்கூட மக்களிடையே செல்வாக்கை இழக்கச் செய்துவிடும். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது ஆட்சிபீடத்தின் மீது காட்டும் சினம், மக்கள் குரலாகப் பார்க்கப்படும். ஆட்சிபீடத்தில் இருந்துகொண்டு காட்டும் சினம், நியாயமான சினமாக இருந்தாலும், அதிகார மமதையாகத்தான் பார்க்கப்படும்.தமிழகத்தை எடுத்துக் கொண்டால் நிலப்பறிப்பு வழக்கு தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க இன்றைய தமிழக முதல்வர் விரும்பினாலும், வழக்குப் பதிவேடுகள் அனைத்திலும் சட்டத்தின் ஓட்டைகள்! ஆட்சி மாறினால், ஒரே மாதத்தில் இந்த வழக்குகள் தள்ளுபடியாகிவிடும். ஊழல் செய்த எந்த அமைச்சர் மீதும், அவர் சார்ந்த துறையின் ஊழல் தொடர்பாக ஒரு வழக்குகூடப் பதிவு செய்யப்படவில்லை. அதிகாரிகளும் சரி, காவல்துறையினரும் சரி, முன்னாள் ஆட்சியாளர்களின் பகையைச் சம்பாதித்துக் கொள்ளாமல் நடவடிக்கை எடுத்ததைப்போல நடிப்பார்கள் என்பது நடைமுறை உண்மை……….ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருக்கும் போது லஞ்சம், ஊழலில் ஈடுபட்டுவிட்டு, பிடிபட்டு கோர்ட்டுக்கு செல்லும் போதும், தண்டனை விதிக்கும் போதும், வயதை காரணம் காட்டுவதும், உடல்நிலையை காரணம் காட்டுவதும் வேதனையாக உள்ளது.மாட்டாத வரை, மமதையாகத் திரியும் இவர்களுக்கு, மாட்டிக் கொண்டால் மட்டும், நெஞ்சு வலி வந்து விடுகிறது. வயதைக் காரணம் காட்டி, நீதிபதிகளிடம் தண்டனை காலத்தை குறைத்துக் கொள்ளும்படி கெஞ்சுகின்றனர்……………… 

பிட் பிட் பிட்டுகள் ...2

தங்களுக்குவிருப்பமானவர்களுக்கு என்றால் கண்ணைமூடிக்கொள்வதும் வேறு நபர் என்றால் தலையில் குட்டிதலையங்கம் எழுதுவதையும் தாங்கள் நிறுத்தி விட்டுநேர்மையை கடை பிடிக்க வேண்டும்.....வாகனத்தை ஒட்டும் போது மொபைலை,உபயோகப்படுத்துவதன் மூலம்அதுவே எமனாகி விடுகிறதுஒவ்வொரு முறை விபத்துகள் நேரிடும் போதும்உயிரிழப்புகளுக்கும்காயங்களுக்கும்,ரெடிமேடானஆறுதல் அறிக்கையுடன்நிவாரணத் தொகை வழங்கிவிடுவதால்,அரசின் கடமை முடிந்து விடாதுசாலை விதிகளை மீறுபவரைகடுமையாகத்தண்டிக்க தயக்கம் காட்ட கூடாதுமொபைலில் பேசிக்கொண்டேவாகனம் ஓட்டுபவரின் உரிமத்தை  கூட ரத்து செய்து விடலாம்முக்கியமாக மதுவிலக்கை மனஉறுதியோடு அமல்படுத்த வேண்டும்இவை நடந்தால்பல உயிர்கள் பிழைக்கும்.டிராபிக் போலீசாரும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைஉண்மையானஅக்கறையோடு அமல்படுத்தினாலே போதும்; 75 சதவீத சாலை விபத்துகள் குறைந்துவிடும்துளிகூட பயமின்றிசாலை விதிகளை மீறுவதற்கான தைரியம் எப்படிவருகிறதுபிடிபட்டால்குடுக்க வேண்டியதை கொடுத்தால் தண்டனை இல்லாமல் தப்பிக்கலாம் என்ற நிலைமை உள்ளதால்தான்……  சீன-இந்திய வர்த்தகஉறவுகள் மேம்பட்டுக்கொண்டே இருக்கக் காரணம்சீனா நம்முடன் பொருளாதார ரீதியில் மோதுகிறதே தவிரமறைமுகமாகஇந்தியாவுக்கு எதிரான தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வளர்த்து விடுவதில்லை …….நம் நாட்டில், 69 சதவீதம் பேரின் சராசரி தினசரிவருமானம், 100 ரூபாய்க்கும் குறைவாகவே உள்ளதாகசமீபத்தில் உலக வங்கி வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது உண்மையாபொய்யாஎன்பது ஒரு புறம் இருக்கட்டும்... நம் திட்ட கமிஷன் துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா போன்றோர், "ஒரு நாளைக்கு, 30 ரூபாய்க்கு மேல் வருமானம்ஈட்டுவோர் வறுமையானவர்கள் அல்லஎன்று கண்டுபிடித்துபுல்லரிக்க வைத்திருக்கின்றனர்.மற்றொரு புள்ளி விவரத்தில்நம் இந்தியரின் சராசரி ஆண்டுவருமானம், 60 ஆயிரம் ரூபாய் என்கிறதுஅதே சமயம்தனி நபர் வருமானம் அமெரிக்காவில், 23 லட்சம்ஜெர்மனியில், 25 லட்சம்சுவிட்சர்லாந்தில், 33லட்சம் ரூபாய் என்ற அளவில் இருக்கிறதுஉலகப் பொருளாதாரத்தில்எப்படி நாம் உயர்ந்துமற்ற நாடுகளோடு போட்டி போடப் போகிறோம்நாடு சுதந்திரம்பெற்ற, 65 ஆண்டுகளில், 50 ஆண்டுகளுக்கு மேல்காங்., தலைமையிலான அரசு அல்லது அதன் ஆதரவு பெற்ற அரசுதான் ஆண்டு கொண்டிருந்தது……. "காங்கிரஸ்மூத்த தலைவர்களின் வாய் நீளமேதோல்விக்குக் காரணம்என்றுராகுல் நடத்திய ஆலோசனையில்தோற்றவர்கள் குமுறியுள்ளனர்இதுநூற்றுக்கு நூறுஉண்மைகாங்., பேச்சாளர்களில்திக்விஜய் சிங் ஒருவர் வாயே போதும்மேலும்தேர்தல் கமிஷனையே மதிக்காத மத்திய அமைச்சர்களின் வாய் நீளமும்,பெருத்த தோல்விக்கு அடிப்படைராகுலைப் பற்றிதோற்றவர்கள் குமுறாவிடினும்ராகுல் இதை உணர்ந்திருப்பார்ராஜிவின் மொத்தக் குடும்பமும் .பி.,யில்பவனி வந்ததைமக்கள் வெறுப்போடுதான் பார்த்திருப்பர்மத்தியில் நடக்கும் எண்ணிக்கையற்ற ஊழல் நாடகங்களைஊடகங்கள் மூலம் அறிந்த .பி., மக்கள்,ஊழல் மையத்தில் ராகுலும் ஆணிவேர் தானே என்று புறக்கணித்து விட்டனர்………………………..நாட்டின் நதிகளை இணைக்கநிபுணர் குழு அமைக்கும்படிமத்திய அரசுக்குசுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதுஇந்தியாவின் ஒரு பகுதியில் வெள்ளச் சேதம்இன்னொரு பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறதுவெள்ளப் பெருக்கை வறட்சிப்பகுதிக்கு திருப்பிவிட மட்டுமேநீர்வளப் பயன்பாடு வல்லுனர்கள்நதிகள் இணைப்பு திட்டத்தை வரைந்தனர்முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் காலத்தில்,கொள்கையளவில் ஒப்புக்கொள்ளப்பட்டுபிரதமர் வாஜ்பாய் காலத்தில்இத்திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதுகாங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலிடம்சிலமேதாவிகள்தவறான தகவல்களைக் கூறிகுழப்பி விட்டனர்எனவேபிரதமர் மன்மோகன் சிங்இந்த திட்டம் குறித்துதைரியமாக சொந்தக் கருத்துவெளியிடவில்லைதிட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவறுமைக் கோட்டுக்கு விளக்கம் தந்துசர்ச்சையில் சிக்கியவர்தினமும், 25ரூபாய் கூட வருமானம் இல்லாதவர் தான்வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர் என்பதை கண்டுபிடித்த இந்த, "பொருளாதார விஞ்ஞானிநதிகள் இணைப்புதிட்டத்துக்கும்புதிய முட்டுக்கட்டையை போடுகிறார். "நிறைய தொழில்நுட்பசுற்றுச்சூழல்பொருளாதார பிரச்னைகளை அலசி ஆராய்ந்த பிறகுதான்நதிகள்இணைப்பை துவக்க முடியும்இமாலய நதிகளை இணைப்பதில்சர்வதேச பிரச்னைகள் உள்ளனநதிகளின் இயற்கையான தடத்தை மாற்றுவது விவேகமல்லஎன,அலுவாலியா கூறுகிறார்மிகுந்து வரும் வெள்ளத்தை மட்டும்தான்வறட்சிப் பகுதிகளுக்கு திருப்பிவிட திட்டமிடுகின்றனர்ஏற்கனவே ஓடும் நதிகளின் தடமோ,கொள்ளளவோ இதனால் மாறப் போவதில்லைவிவசாயம்நீர்வழி போக்குவரத்து மேம்படசீனாவில், "சர்குலர் வாட்டர் வேஸ்ஏற்கனவே உள்ளதுஅங்குஒருசொட்டு நீர் கூட வீணாக கடலில் கலக்காதுஆனால்இங்கேயோ நிலைமை பரிதாபம்!.............................. திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்பது ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை.இதனாலேயே தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்று அறிவித்து நடைமுறைப்படுத்திட திமுக அரசு முடிவு செய்ததுதைமுதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்காத நிலையில் திருவள்ளுவர் ஆண்டினை அதிமுக அரசு என்ன செய்யப் போகிறது என்று திமுகதலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்……இயற்கையை நாம் அழித்து வருவதே, பேரழிவுஏற்படுவதற்கு முக்கிய காரணம்.நிலநடுக்கம் போன்றவை இயற்கையானது தான்; இவற்றைக்கட்டுப்படுத்த இயலாது என்றாலும், ஓரளவிற்காவது மட்டுப்படுத்த முடியும்.நம் நாட்டில், 13சதவீதத்திற்கும் குறைவாகவே காடுகள் உள்ளன. ஆங்காங்கே இருக்கும் மரங்களும்,கட்டடங்கள் கட்ட, சாலை போட என, பல்வேறு காரணங்களைக் கூறிஅழிக்கப்படுகின்றன.இதனால், மழை பொய்த்துப் போவது மட்டுமின்றி, நீரையும் சேமிக்கஇயலவில்லை.இது தவிர ஏரி, குளம், குட்டைகளை ஆக்கிரமித்து கட்டப்படும்கட்டடங்களால், நீர்வளம் குறைகிறது. நிலத்தடி நீரை உறிஞ்சுவது, மணல் கொள்ளை என,கனிம வளங்கள் சுரண்டப்படுவதால், பூமியில் வெற்றிடம் தோன்றுகிறது. இப்படி,எல்லாவிதத்திலும் நிலத்தை பாழ்படுத்தியதால்தான், இந்த, "நடுக்கம்!'மேலும், மெல்லியபிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு, வாகனங்கள் கக்கும் புகையால் வளி மண்டல பாதிப்பு என,இயற்கையை பல வழிகளில், "ரவுண்டு' கட்டி அழிப்பதால், மழை காலத்தில் சுட்டெரிக்கும்வெயிலையும், வெயில் காலத்தில் நடுங்க வைக்கும் பனியிலும் உறைந்துகொண்டிருக்கிறோம்.நம் முன்னோர் இயற்கையை பாதுகாத்து, அவற்றோடு இயைந்தவாழ்க்கை நடத்தியதால், ஆரோக்கியமாக வாழ்ந்தனர். நாம் அவற்றை அழித்து, சொகுசுவாழ்க்கை வாழ்வதால், ஆரோக்கியத்தையும் இழந்து, இயற்கை பேரழிவில் சிக்கி, கூட்டம்கூட்டமாக மடிகிறோம்.இனியாவது, இயற்கையை பாதுகாப்பதில் கவனம் செலுத்தவேண்டும். அதற்குத் தான் அரசாங்கம் உள்ளதே என்று எண்ணாமல், தனிநபர்களுக்குபொறுப்பு வர வேண்டும். அரசாங்கமும், "வீட்டிற்கொரு மரம் வளர்ப்போம்; கனிமவளங்களை காப்போம்' என்று விளம்பத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், அவற்றைநடைமுறைப்படுத்தி, மக்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். அப்போது தான், நாளையதலைமுறை தப்பிக்கும்………நாட்டின், 121 கோடி மக்கள் தொகையில், 60 சதவீத மக்கள்இன்றைக்கு மிகப்பெரிய நெருக்கடிசூழ்நிலைகளானபருவநிலை மாற்றம்வான்மழை பொய்த்தல்வறண்டு வரும் நீர் ஆதாரங்கள்முறையற்ற மின்சார வினியோகம்விவசாயக் கூலியாட்கள் தட்டுப்பாடு,உச்சத்தில் உயர்ந்துள்ள உர விலைவிளை பொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்காததுஉணவுப் பொருட்களைச் சேமிக்க சரியான கிடங்கு வசதி இல்லாமைபோன்றவற்றுடன் போராடிவிவசாயம் செய்துஉணவு தானியங்களை உற்பத்தி செய்துஅரசு களஞ்சியங்களை நிரப்புகின்றனர்அதனால் தான்உணவுத் தட்டுப்பாடு இன்றி,நமது நாடு உலக அரங்கில் வீறு நடை போடுகிறது.  கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளின் அபரிமிதமான புழக்கத்தினால்இந்தியாவில் விலைவாசி பல மடங்குஉயர்ந்து வருகிறதுவெளிநாடுகளிலும்சுவிஸ் வங்கியிலும் பதுக்கப்பட்டுள்ள பணம், 300 லட்சம் கோடிகளாக இருக்கும் என்றுபத்திரிகையில் வரும் செய்திகளைப் பார்க்கும்போதுபகீரென்றுதான் உள்ளதுவங்கிகளிடம் கடன் பெற்றுஅதை முறையாகத் திருப்பி செலுத்தாத வகையில் இருக்கும் வராக்கடன்கள், 200 லட்சம் கோடிகளாகஇருப்பதாகபத்திரிகைச் செய்திகள் தெரிவிப்பதுவருத்தத்தையும்மறுபுறம் அதிர்ச்சியையும் அளிக்கிறதுஏழைபணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல்அரசாங்கத்தால்செய்யப்பட்ட விவசாயக்கடன் தள்ளுபடி, 60 ஆயிரம் கோடி ரூபாய்மீண்டும் பல வகைகளில் முதலீடு செய்யப்பட்டுஉல்லாசமாக "உலாவருகிறதுஇதில்உண்மையாகபாடுபட்டு விவசாயம் செய்யும் ஏழை விவசாயிகள், 1 சதவீதமாவது பயன் பெற்றிருப்பராசந்தேகமேஇதனால்பலன் பெற்றவர்கள் யாராக இருக்கும் என்பதைவடிகட்டியமுட்டாள்கள் கூட எளிதில் ஊகித்துவிடுவர். .*********************** தமிழ்ப் புத்தாண்டுக்கு கூட, "ஹேப்பி டமில் நியூ இயர்'னு வாழ்த்து சொல்றவங்களுக்குதமிழ்ப் புத்தாண்டு என்னிக்கு வந்தா என்ன….***************** கல்விக்கு ஆதாரம் ஆசிரியர்கள்அவர்கள் இல்லாமல்நல்லமாணவர்கள் இல்லைஆனால்சமீபகாலமாகநம் பள்ளி ஆசிரியர்களின் ஒழுக்கம்,மிகப் பெரிய கேள்விக்குறியாகி விட்டது.குடித்துவிட்டு பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் ,மாணவமாணவியரிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள்பிட்அடிக்கஉதவி செய்துஅவர்களை தேர்வில் வெற்றி பெறச் செய்யும் ஆசிரியர்கள் குறித்த பலசெய்திகள்தினசரி ஊடகங்களில் வருகின்றன.  இவர்களில்பல நல்லாசிரியர்களும்இருக்கின்றனர்சில,ஊழல் பேர் வழிகள் அவர்களையும் நல்ல முறையில் பணிசெய்யவிடாமல்அவமானப் படுத்துகின்றனர்ஆசிரியர் தொழிலில்நேர்மை இருக்கவேண்டும்ஏற்கனவேநம் நாட்டில் ஊழல் மலிந்துள்ளதுஇந்நிலையில்எதிர்காலசிற்பிகளை உருவாக்கும் ஆசிரியர்களேஊழலை பள்ளி மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்து அனுப்பினால்நாடு எப்படி ஊழல் இல்லாத நாடாக மாறும்.........கலைஞர் கருணாநிதி மேல் வன்மம் என்றால் அவர் கடந்த ஆட்சியில் அடித்த தில்லு முல்லுகளை வெளியே எடுத்து வாருங்கள் வழக்குபதியுங்கள்.அதை விட்டுவிட்டு பல பேர் இரவு பகல்  பாராமல் அரும்பாடு பட்டு  மக்கள் வரிப்பணத்தில்கட்டிய அரசு கட்டடிடங்களை  அதிகாரம் இருப்பதால் ஒரு கையெழுத்தில்மாற்றலாம் என்றுநினைக்கின்றீர்கள்.உங்களஆதரிக்க சில அல்லக்கைகள் இருக்கின்றார்கள். அவர்கள் வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு  நடுநிலை போர்வையில் புதியதலைமைசெயலக கட்டிடத்தை   எண்ணெய் சட்டி கட்டிடம் என்று சொல்லிக்கொண்டுஇருக்கலாம்.எனக்கு தெரிந்து ஒரே ஒரு விஷயத்தில் உங்களுக்கு காலம் எல்லாம்
நன்றிசொல்ல நான் கடமைபட்டு இருக்கின்றேன்.மழை நீர் சேகரிப்பின் மூலம் தண்ணீர்பிரச்சனையில் சென்னை ஒரளவு தன்னிறைய்வு  அடையசெய்த உங்களின் அந்த அரசாணை வாழ்நாள் முழுவதும் உங்கள் பேர்  சொல்லும்.வீராணம் திட்டம் சாத்தியமேஇல்லை   என்று உதடுபிதுக்கினார்கள்.ஆனால் நீங்கள் வசப்படுத்தினீர்கள்.திறமைஇல்லாதவர் அல்ல நீங்கள்.மக்கள் பணிகளில் உங்கள் திறமையை நிரூபித்துகாட்டுங்கள்.தமிழகசாலையில் நீர் தேங்காத உலகத்தர சாலைகள்அமைப்பேன்ஊழல் இல்லாத அரசு நிர்வாத்தை நடத்தி  காட்டுவேன் என்று சவால்விடுங்கள்.உங்கள் திறமை ஈகோவினால் வீணடிக்கபடுகின்றது என்பதே மறுக்க முடியாத உண்மை...
மனித சமுதாயத்தில்துன்பதுயரங்களை பற்றி கவலை கொள்ளாதவர்களைமிருகங்கள் என்றார் மாமேதை மார்க்ஸ். புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்சொல்லும் பொழுது;;தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடுசம்பாத்யம் இவையுண்டு தானுண்டு என்போன்  சின்னதொருகடுகுபோல் உள்ளங் கொண்டோன்,தெருவார்க்கும் பயனற்றசிறிய வீணன்!கன்னலடா என்சிற்றூர் என்போனுள்ளம்கடுகுக்கு நேர்மூத்த துவரையுள்ளம்....