புதன், 30 மார்ச், 2011

ஒரு ஊழல் காரணமாக 66 அப்பாவி ஏழை கிராம மக்கள் பார்வை இழந்தார்கள்...

மத்திய அரசு தாக்கல் செய்த அத்தனை ஆவணங்களையும் பரிசீலித்த நீதிபதிகள், தங்கள்  தீர்ப்பில்,
மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ஜோசப் மருத்துவமனைக்கு ஒரு கோடியே, பதினைந்து லட்சத்து இருபத்தைந்தாயிரத்து இருநூற்று எண்பது ரூபாய் 2008-2009ம் ஆண்டுக்கு மட்டும் வழங்கப் பட்டுள்ளது. “பூர்வாங்கமாக பார்க்கும் போது, இலவச கண் மருத்துவ முகாம் என்ற பெயரில், அறுவை சிகிக்கை என்று கோரி, பல கோடி ரூபாய்கள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.   மத்திய அரசு மாநில அரசுக்காக ஒதுக்கிய மொத்த நிதியில் பாதிக்கும் மேல் ஜோசப் மருத்துவமனைக்கு மட்டும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மத்திய அரசு ஒதுக்கும் நிதி எப்படி பயன்படுத்தப் படுகிறது என்பது எப்படி கண்காணிக்கப் படுகிறது என்பது எங்களுக்கு புரியவில்லை
நிபுணர்கள் குழு, தங்களது அறிக்கையில் ஜோசப் மருத்துவமனைக்கு கண் புரை நீக்கு அறுவை சிகிச்சை செய்ய போதுமான வசதிகள் இல்லை என்று தெரிவித்த பிறகும், எந்த அடிப்படையில் பார்வைக் குறைவு கட்டுப்பாட்டு சங்கத்தின் தலைவராக உள்ள மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், ஜோசப் மருத்துவமனை கண் சிகிச்சை முகாம் நடத்த எப்படி அனுமதி அளித்தார் என்பது எந்தச் சூழலில் என்பது எங்களுக்கு புரியவில்லை.”

என்று பதிவு செய்த நீதிபதிகள், உடனடியாக இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்று, சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். சிபிஐ தனது விசாரணையில், இந்த 66 கிராமத்தினர் கண் பார்வை இழந்த இந்த விவகாரத்தில் மருத்துவர்களின் பொறுப்பு என்ன, மற்றவர்களின் பொறுப்பு என்ன என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், பொறுப்பானவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், மத்திய அரசு வழங்கிய மொத்த நிதியில் பெரும் பகுதி, ஜோசப் மருத்துவமனைக்கு எப்படி ஒதுக்கப் பட்டது என்றும், அந்த நிதி எப்படி செலவிடப் பட்டது என்றும் ஆறு வார காலங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
.
கண்பார்வை இழந்த கிராமவாசிகளுக்கு, ஒரு லட்ச ரூபாயை பிச்சையாக வீசி விட்டு, சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் கருணாநிதி, தனது மகளுக்கோ, மனைவிக்கோ, ஒரு சிறிய நகரம் அளவுக்கு இருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கோ, இப்படி கண்பார்வை போனால், ஒரு லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு, அமைதியாக இருப்பாரா ?

சம்பவம் நடந்த பொழுது பெரம்பலூர் கலெக்டராக இருந்தவர் அனில் மேஷராம்.   இவர் ஆண்டிமுத்து ராசாவின் நெருங்கிய கூட்டாளி என்பதும், பெரம்பலூர் விவசாயிகளின் நிலங்களை சாதிக் பாட்சாவின் க்ரீன் ஹவுஸ் ப்ரமொட்டர்ஸூக்காக, பறித்து எம்ஆர்எஃப் ஆலைக்கு வழங்கியவர் என்பதும் குறிப்பிடத் தகுந்தது.
உடனடியாக இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்று, சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். சிபிஐ தனது விசாரணையில், இந்த 66 கிராமத்தினர் கண் பார்வை இழந்த இந்த விவகாரத்தில் மருத்துவர்களின் பொறுப்பு என்ன, மற்றவர்களின் பொறுப்பு என்ன என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், பொறுப்பானவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், மத்திய அரசு வழங்கிய மொத்த நிதியில் பெரும் பகுதி, ஜோசப் மருத்துவமனைக்கு எப்படி ஒதுக்கப் பட்டது என்றும், அந்த நிதி எப்படி செலவிடப் பட்டது என்றும் ஆறு வார காலங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.நீதிமன்றம் இந்த நேர்வில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால் என்ன நடந்திருக்கும்..... 

வியாழன், 24 மார்ச், 2011

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை....

தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம்: பெண்களுக்கு ஒரு மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும். கல்வி, மருத்துவம், விவசாயம், நதிநீர், அடிப்படை கட்டமைப்பு, வீடு, மின்சாரம், தொழில் துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, தமிழகத்தை தலை நிமிர செய்வதுதான் அ.தி.மு.க.,வின் லட்சியம். மதிப்பு கூட்டப்பட்ட வேலை வாய்ப்பை உருவாக்கி, தனி நபர் வருவாயை, 2 மடங்குக்கு மேல் உயர்த்துவோம். விவசாய உற்பத்தியை இரு மடங்காக பெருக்கி, மதிப்பு கூட்டப்பட்ட விவசாயப் பொருட்களின் உற்பத்தியால், 9 சதவீத விவசாய வளர்ச்சி, அரிசி உற்பத்தி, 13.45 டன்னாக உயர்த்துதல். விவசாய தனிநபர் வருமானத்தை, 3 மடங்குக்கு மேல் உயர்த்தி, 30 ஆயிரம் எக்டேர் நிலத்தை சிறப்பு சிறுபாசன திட்டத்தில் கொண்டு வருவோம். தள்ளுபடி விலையில் தரமான விதைகள், இடு பொருட்கள், விவசாய கருவிகள், வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்பிற்கு நஷ்ட ஈடு, ஒவ்வொரு குடும்பத்திற்கும், 20 கிலோ அரிசி வழங்கப்படும்.
விலைவாசியை குறைக்க, ஆன்-லைன் வர்த்தகத்தால் ஏற்படும் பாதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும். "எத்தனால்' எரிபொருள் உற்பத்தியை பெருக்க, கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு, 2,500 ரூபாயாக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனபடுத்தப்பட்டு, நிர்வாகம் சீரமைக்கப்படும். புதிய எத்தனால் தயாரிப்பு கொள்கை வகுக்கப்படும். விவசாயிகளை பங்குதாரர்களாக கொண்ட விவசாய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, சொட்டு நீர் பாசன வசதி அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும். ரேஷன் கார்டுகளுக்கு குறைந்த விலையில் பருப்பு, மசாலா பொருட்கள், சமையல் எண்ணெய், மளிகை பொருட்கள் வழங்கப்படும்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு, 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசம். இதன் மூலம், 5.6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு புதிதாக உருவாக்கப்படும். புதிதாக, லட்சம் பேருக்கு போக்குவரத்துத் துறையில் வேலை கிடைக்கும். இதன் மூலம், 20 ஆயிரம் தொழிற்சாலைகள் உருவாக வாய்ப்பு ஏற்படும். அனைவருக்கும் சீரமைக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும். மாவட்ட மருத்துவமனைகளில், மேம்படுத்தப்பட்ட மருத்துவ, பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்படும். கிராமங்கள் தோறும் நடமாடும் மருத்துவமனை, 1,500 கிராமங்களில், 24 மணி நேரமும் செயல்படும், "டெலி மெடிசின் சென்டர்' ஏற்படுத்தப்படும். அனைவருக்கும் குறைந்த விலையில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள சூரிய சக்தி மின்சார பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்.
3 லட்சம் பேருக்கு, 300 சதுரடியில், 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில், இலவசமாக பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். 40 லட்சம் நடுத்தர மக்களுக்கு லட்ச ரூபாய் மானியத்தில் திட்டம் விரிவாக்கப்படும். வீடில்லாதவர்கள் வீடு கட்ட மூன்று சென்ட் நிலம் வழங்கப்படும். கூட்டுறவு சங்கங்கள் வழங்கிய வீட்டுக் கடன், வட்டிகளால் ஏற்படும் பிரச்னை தீர்க்கப்படும். அனைத்து பகுதிகளுக்கும், 4 ஆண்டுகளில், மும்முனை மின்சார இணைப்பு, தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். மின் திருட்டை ஒழிக்க, மின் பாதுகாப்புப் படை அமைக்கப்படும். 2013க்குள், 5,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும். இரண்டு ஆண்டுகளில், நகராட்சி, மாநகராட்சி கழிவுகளை கொண்டு, 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் தமிழக நகரங்கள் தூய, "கார்பன் நியூட்ரல்' நகரங்களாக மாறும். சூரிய சக்தி, காற்றாலை, இயற்கை எரிவாயு மூலம் மின் உற்பத்தி அதிகரிக்கப்படும். இதன் மூலம், கிராமங்களில், 64 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். வீடுகள், தெருக்களுக்கு சூரிய ஒளி மூலம் இலவச மின்சாரம் வழங்கப்படும். இவ்வாறு அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், சிறப்பு உணவு பூங்கா, குளிர் பதன கிடங்குகள் மற்றும் உணவு தொழிற்பூங்கா, நவீன மக்கள் சந்தைகள், பருத்தி உற்பத்தியை இரண்டு மடங்காக்க நடவடிக்கை, ஆடை, அலங்கார பொருட்களுக்கு சிறப்பு பொருளாதார மண்டலங்கள், கைத்தறி துறை மறு சீரமைப்பு, பால் உற்பத்தியை பெருக்க வெண்மை புரட்சி, அடிதட்டு மக்களுக்கு, 4 ஆடுகள் வழங்கப்படும். நகர்ப்புற வசதிகள், கிராமங்களுக்கும் கிடைக்க திட்டம், பள்ளி கல்வி சீரமைப்பு, உயர் கல்விக்கு 12 அம்ச திட்டம், மாணவர்களை ஊக்குவிக்க தனித்திறமை, அறிவுசார் வளர்ச்சிக் கழகம், மீன் பிடி தொழில் நவீனமாக்கல், எஸ்.சி., - எஸ்.டி., - சிறுபான்மையினர், தொழிலாளர்கள், இளைஞர்கள், சுய உதவிக்குழுக்கள், முதியோர், ஆதரவற்றோர், தமிழ் அகதிகளுக்கு சிறப்பு திட்டம் உள்ளிட்ட, பல்வேறு திட்டங்கள் இடம் பெற்றுள்ளன....

அதிமுக தேர்தல் அறிக்கை....24/03/2011

தாய்மார்களுக்கு இலவச ஃபேன், கிரைண்டர், மிக்ஸி; மாணவர்களுக்கு லேப்-டாப்; குடும்ப அட்டைதாரர்களுக்கான ரூ.1 அரிசி இலவசமாக வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள், அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
அதிமுக தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று திருச்சியில் வெளியிட்டார்.
திமுக தேர்தல் அறிக்கையை விழுங்கிடும் அளவில் தனது வாக்குறுதிகளில் இலவச அறிவிப்புகளை அடுக்கியிருக்கிறார், ஜெயலலிதா. அதன் முக்கிய அம்சங்கள்:
வேளாண் திட்டங்கள்... 
* தமிழகத்தில் இரண்டாம் விவசாய புரட்சித் திட்டம் மக்கள் இயக்கமாக அறிவிக்கப்படும்.  .
* விவசாயியின் தனிநபர் வருமானத்தை 2 முதல் 3 மடங்குக்கு மேல் உயர்த்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். 30,000 ஹெக்டேர் நிலப்பரப்பை சிறப்பு சிறுபாசன திட்டத்தில் கொண்டு வருவோம்.
* கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு உதவும் வகையில் வழங்க இருந்த விவசாய கருவிகளை அத்தொழிலாளர்களுக்கு உதவுகிற வகையில் மீண்டும் விவசாய கருவிகளை இலவசமாக வழங்குவோம்.
* தரமான விதைகள், விவசாய இடுபொருள்கள் ஆகியவை தள்ளுபடி விலையில் விவசாயிகளுக்கு கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
* வன விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு தாமதமின்றி இழப்பீடு கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். வன விலங்குகள் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
* மதிப்பு கூட்டப்பட்ட விவசாயத்தை தொழிலாக அறிவிக்கப்பட்டு - உணவு பதப்படுத்தும் சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு, விவசாயிகள் விவசாய நிறுவனங்களில் பங்குதாரர்கள் ஆக்கப்படுவார்கள்.
* அனைத்து மாவட்டங்களிலும் தேவைக்கேற்ற குளிர் பதன கிடங்குகள் ஏற்படுத்தப்படும்.  விவசாய விளை பொருள்கள் சேகரிப்பு நிலையங்களை நவீனப்படுத்துவோம்.
ரூ.1 அரிசி இலவசமாக..
குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடரும் என்ற நிலையை மாற்றி பயனாளிகள் அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.
* கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு 2,500/- ரூபாயாக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனப்படுத்தப்பட்டு, நிர்வாகம் சீரமைக்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக அரசு மற்றும் தனியார் அரசு ஆலைகள் கொள்முதல் விலையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 
* நுண்ணிய வேளாண்மை திட்டத்தை செம்மைப்படுத்தி, அதன் மூலம் விவசாயிகளை பங்குதாரர்களாகக் கொண்ட விவசாய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, சொட்டு நீர்ப் பாசன வசதி அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்.
* ஆண்டுக்கு 7 லட்சம் டன் பருப்பு உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பருப்பு கொள்முதல் கொள்கையை உருவாக்கி, தர வேறுபாடு இல்லாமல் துவரம் பருப்பு கிலோ 35 ரூபாய் முதல்
40 ரூபாய்க்குக் குறையாமல் கொள்முதல் செய்யப்படும். உற்பத்தித் தள்ளுபடியாக 300 கிலோ பருப்புக்கு உற்பத்தி செலவு ஊக்கத் தொகையாக 500 ரூபாய் வழங்கப்படும்.
* குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் பருப்பு, மசாலா பொருட்கள், சமையல் எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் நியாய விலைக் கடைகள் மூலம் அனைத்து நுகர்வோருக்கும் வேறுபாடு இல்லாமல் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
சுத்திகரிக்கப்பட்ட தூய குடிநீர் திட்டம்...
* வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடி தண்ணீர் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் 5.6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு புதிதாக உருவாக்கப்படும்.
* புதிதாக 1 லட்சம் பேருக்கு போக்குவரத்துத் துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இதன் மூலம் 20,000 தொழிற்சாலைகள் உருவாக வாய்ப்பு ஏற்படும்.
அனைவருக்கும் தரமான மருத்துவம்...
* குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சீரமைக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
* அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மருத்துவமனைகளில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ மற்றும் பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
* கிராமங்கள் தோறும் நடமாடும் மருத்துவமனை கிராமத்துக்கே வரும் உன்னத திட்டம் செயல்படுத்தப்படும்.
* 1500 கிராமங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தொலை தூர மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும்.
நவீன பசுமை வீடு...
* கருணாநிதியின் வீட்டு வசதித் திட்டம் நடைமுறை சாத்தியம் இல்லாத வகையில் இருப்பதாலும் மற்றும் மக்களுக்கு மேலும் நிதிச் சுமையை ஏற்றக் கூடிய ஏமாற்று வேலை என்பதாலும், அதிமுக அரசு நவீன பசுமை வீட்டு வசதித் திட்டத்தை அறிமுகப்படுத்தும்.
அதன்படி, அனைவருக்கும் குறைந்த விலையில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள, சூரிய சக்தி மின்சார பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்.
வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் 3 லட்சம் மக்களுக்கு 300 சதுர அடியில் 1,80,000/- ரூபாய் செலவில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். மேலும் 40 லட்சம் நடுத்தர வகுப்பு மக்களுக்கு இத்திட்டம் 1 லட்சம் ரூபாய் மானியத்துடன் விரிவாக்கம் செய்யப்படும். 
வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்ட 3 சென்டில் இடம் அளிக்கப்படும்.
இருண்ட தமிழகம் ஒளி பெற..
* இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்படும். மின்சார வாரியம் திருத்தி அமைக்கப்பட்டு, மின் விநியோகம் சீராக்கப்பட்டு, மின் திருட்டு தடுக்கப்படும். வீடு, தொழில் மற்றும் விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
* அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சார இணைப்பு மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
மின்சார திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டு மின்சார பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.
* வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் வீடுகளுக்கு சூரிய ஒளி மூலம் தடையில்லா மின்சார வசதி இலவசமாக வழங்கப்படும். கிராமப்புற தெரு விளக்குகள் சூரிய ஒளி மின்சாரத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
    
சிறப்பு உணவுப் பூங்கா...
* விவசாய உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் பூங்காக்கள், குளிர்பதன கிடங்குகள், தொழிற் பூங்காக்கள் மாவட்டத்தில் அமைக்கப்படும்.
* குறைந்த விலையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் அனைத்து விவசாய விளை பொருட்களும் மக்களுக்கு விரைந்து கிடைக்கின்ற வகையில் நவீன மக்கள் சந்தைகள் மற்றும் பொருட்களை பதப்படுத்தப்பட வேண்டிய குளிர்சாதன வசதிகள் செய்து தரப்படும்.
* விவசாயிகளை பங்குதாரர்களாகக் கொண்ட 6 ஆடை அலங்கார சிறப்பு பொருளாதார மண்டலங்கள் துவக்கப்படும். இதன் மூலம் தமிழ் நாட்டில் 70 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
ஆடு, மாடுகள் இலவசம்...
* மீண்டும் ஒரு வெண்மை புரட்சியை உருவாக்க திட்டம் தீட்டப்படும். 2016ஆம் ஆண்டுக்குள் 6000 கிராமங்களில் சீரமைக்கப்பட்ட பால் பண்ணைகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பால் உற்பத்தியை தினமும் 2.5 மில்லியன் லிட்டரில் இருந்து 10 மில்லியன் லிட்டராக பெருக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அதை ஊக்குவிக்கும் வகையில் 6000 கிராமங்களில் சுமார் 60,000 பால் கறவை மாடுகள் இலவசமாக வழங்க வழிவகைகள் செய்யப்படும்.
* வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். கால்நடை வளத்தைப் பெருக்கும் வகையில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.
அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்...
* மாணவர்களின் புத்தகச் சுமை குறைக்கப்படும். தரமான, இலவச கல்வி அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
* மாணவர்களுக்கு 4 சீருடைகளும், காலணிகளும் இலவசமாக வழங்கப்படும்.
* 10-12ஆம் வகுப்பு வரை வேறுபாடு இல்லாமல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக 1,000/- ரூபாய் முதல் 5,000/- ரூபாய் வரை வழங்கப்படும்.
* பள்ளியில் படிக்கும் +1 மற்றும் +2 மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் இலவசமாக வழங்கப்படும்.
* அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் (கலை, அறிவியல் மற்றும் பொறியியல்) மற்றும் பல் தொழில் பட்டய கல்லூரிகளில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப் டாப் கம்ப்யூட்டர் வழங்கப்படும்.
மீனவர்களுக்கு கூடுதல் நிதி...
* மீனவர் பாதுகாப்பு படை அமைக்கப்படும்
* இயந்திர மீன்பிடி படகுகள் வாங்கத் தேவையான மானியம் வழங்கப்படும்.
* மீன் உற்பத்திக்கு உகந்த வழியில் மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்பட்ட 45 நாட்களில், மீனவ குடும்பத்திற்கான உதவித் தொகை 2,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
* பருவ காலத்தால் 4 மாதங்களுக்கு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இயலாத சூழ்நிலையில் இருக்கும் மீனவ குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4,000/- ரூபாயாக வழங்கப்படும்.
* கச்சத் தீவை மீட்டெடுத்து தமிழக மீனவர் நலன் காக்கப்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறுபான்மையினர்களுக்கு சிறப்புத் திட்டம்...
* தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகி உள்ள துறைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் வேலை வாய்ப்புக்கு தகுதி உடையவர்களாக உருவாக்கப்படுவர்.
* தொழில் தொடங்க முனைவோருக்கு 25 சதவீத மானியத்தில் கடன் உதவித் தொகை வழங்கப்படும். அரசுப் பணியில் காலி இடங்கள் நிரப்பப்படும். புதிய வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
* ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ் மாணவர்களுக்கு தங்கும் விடுதிகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். உணவு கட்டணம் மற்றும் உதவித் தொகைகள் கூட்டி வழங்கப்படும்.
இளைஞர்களுக்காக...
* படித்த இளைஞர்கள், இளம் பெண்களுக்கு தொழில் முனைவோருக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, லாப நோக்கத்துடன் சுய தொழில் தொடங்க - அரசு பங்குத் தொகை தகுதிக்கேற்ப 25 லட்சம் ரூபாய் வரை அளித்து, வங்கிக் கடன் ஏற்பாடு செய்து தரப்படும்.
* வீடுகளில் நடைபெறும் திருட்டு, கொள்ளைகளை முற்றிலும் தடுக்க தற்காப்பு கலை பயின்ற இளைஞர்களைக் கொண்டு சிறப்பு சுய பாதுகாப்பு படைகள் அமைக்கப்படும். அவர்கள் சம்பவம் நடக்கும் இடத்திற்கு விரைந்து வந்து தடுத்து பாதுகாக்க நவீன முறைகளுடன் பயிற்சி அளிக்கப்படும். வீட்டை பூட்டி வெளியூர் செல்லும் மக்களின் வீடுகளும் பாதுகாக்கப்படும்.
சுய உதவிக் குழு சிறப்புத் திட்டம்..
* சுய உதவிக் குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.  அதில் 25 சதவிகிதம் வரை மானியம் வழங்கப்படும்.
* திருநங்கைகளுக்கான சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரையிலான மதிப்பீட்டில் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும்.
ஃபேன், மிக்ஸி, கிரைண்டர் ஃப்ரீ...
* தாய்மார்களுக்கு ஒரு ஃபேன், ஒரு மிக்ஸி, ஒரு கிரைண்டர் ஆகிய மூன்று பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
* குழந்தையை பேணி பாதுகாக்க பணிபுரியும் தாய்மார்களுக்கு மகப்பேறு காலச் சலுகையாக 6 மாத விடுமுறையும், 12,000/- ரூபாய் நிதி உதவியும் வழங்கப்படும்.
இலவச பஸ் பாஸ்...
* 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அரசு பேருந்துகளில் பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.
இலங்கை தமிழ் அகதிகளுக்கு...
* இலங்கை தமிழ் அகதிகளுக்கு தரமான இருப்பிடம், தண்ணீர் மற்றும் சுற்றுப்புற சுகாதார மேம்பாடு போன்றவை வழங்கப்படும். தரமான மருத்துவ வசதி செய்து தரப்படும்.  கல்வி பயில தேவையான உதவிகள், சிறப்பு வேலை வாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.
* அகதிகளாக வந்தவர்கள் தமிழகத்திலே கௌரவமாக வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
* இலங்கை தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டில் அடிமைகள் போல் வாழும் நிலைமையை மாற்ற மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
* இலவச திட்டங்கள் இலங்கை தமிழ் அகதிகள் முகாமுக்கும் நீட்டிக்கப்படும். 
நவீன நீர்வழிச் சாலை..
* தமிழக நதிகளை நீர்வழிச் சாலைகள் மூலம் இணைத்து, தண்ணீர் வீணாகாமல், வெள்ளப் பெருக்கு நீரையும் வரைமுறைப்படுத்தி மற்றும் தேக்கி, தேவையான பாசனப் பகுதிக்கு, தேவையான பொழுது பயன்படுத்துவோம். நவீன நீர்வழிச் சாலைக்கு உலக வங்கி கடன் பெற்று செயல்படுத்தப்படும்.
* காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
* அண்டை மாநில நதி நீர் பிரச்சினைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண நல்லிணக்க நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும். 
* முல்லை பெரியாறு மற்றும் அனைத்து நதி நீர் பிரச்சினைகளை தீர்க்க நிலையான தீர்வு எட்ட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ் மொழிக்காக...
* தமிழை இந்திய ஆட்சி மொழியாக்க மத்திய அரசை வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 
* தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும்.
* கணினி வழித் தமிழ் வளர்ச்சிக்கும், ஆராய்ச்சி மேம்பாட்டிற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தனித் தன்மையை இழந்த தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களை சீரமைத்து, தமிழ் மொழி உலகம் எல்லாம் பரவும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழ் மொழியை நீதிமன்றங்களில் நீதித் துறையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* அரசு ஊழியர்களுக்காக...
* அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி வரன்முறை உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்போது நிறைவு செய்யப்படும்.
* அரசு நிர்வாகத்தில் இருக்கும் துறை மற்றும் நிர்வாக ரீதியான பணி சிக்கல்கள் ஆராயப்பட்டு அவற்றை சீராக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்கள் தற்போது அனுபவித்து வரும் அனைத்து சலுகைகளும் தொடரும்.
மாற்றுத் திறனாளிகளுக்காக...
* மாற்றுத் திறனாளிகளுக்கென 3 சதவீத இட ஒதுக்கீடு அரசுப் பணியில் ஒதுக்கப்படும்.  அதை உடனடியாக அரசு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். 
கேபிள் டிவி அரசுடமை... 

தமிழகத்தில் கேபிள் டிவி தொழில் அரசுடமையாக்கப்படும்; ஏகபோகம் தடுக்கப்படும்.  அனைவருக்கும் தொழில் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.
* அனைத்து மக்களுக்கும் அரசு கேபிள் டிவி இணைப்பு அரசு மானியத்துடன் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். டிடிஎச் சேவைகள் மக்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* கேபிள் டிவி மூலமாக கடைசி மைலில் வீட்டுக்கு இணைப்பு கொடுப்பவர்களது தொழில் பாதுகாக்கப்படும். அவர்கள் தொடர்ந்து தொழில் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலை வாய்ப்பு...
* செயல்படாத கிராமப்புற பிபிஓ மையங்களின் இன்றைய வடிவத்தை மாற்றம் செய்து, மாவட்டம் தோறும், கிராமங்களில் 150 கிராமப்புற பிபிஓ மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்களுக்கு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலமாக வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும்.  இதன் மூலம் 15,000 இளைஞர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும், 1 லட்சம் கிராமபுற மக்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மோனோ ரயில் திட்டங்கள்..
சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூருக்கு சிங்கப்பூரில் உள்ளபடி மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
திருமண உதவித் தொகை...
* தற்போது வழங்கப்பட்டு வரும் 25,000/- ரூபாயுடன், தங்கத்தின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, 4 கிராம் (1/2 சவரன்) தங்கம் மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.
* இளநிலை அல்லது டிப்ளொமா பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகை 50,000/- ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.
சட்டம் ஒழுங்கு கண்டிப்பு... 

* சட்டம் ஒழுங்கு கண்டிப்பாக எவ்வித தயவு தாட்சண்யமும் இல்லாமல் நிலை நாட்டப்படும். 
* மக்கள் அமைதியாக வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். 
காவல் துறையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
* முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்.) உடனடியாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* பணியில் மரணமடையும் காவலர்களுக்கு - கருணைத் தொகை 3 லட்சம் ரூபாய் அளவிற்கு உர்த்தப்படும்.
திருப்பூர் சாயக் கழிவு..
* திருப்பூர் சாயக் கழிவு பிரச்னையை பரிசீலித்து அதன் கழிவுகளை சுத்திகரிக்கத் தேவையான தொழில்நுட்பத்துடன் விஞ்ஞான வழியில் கழிவு அகற்றும் நிலையம் உருவாக்கப்படும்.
முதியோருக்கு கூடுதல் உதவித் தொகை...
* முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு மாத உதவித் தொகை 1,000/- ரூபாய் அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும். 
* அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு அரசு மானியம் இரண்டு மடங்காக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவைக்கு ஏற்றபடி அரசு விடுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுத்துவதோடு, அவைகளின் கூட்டமைப்புகள்,
பிற மொழி பயிற்சி... 

* பள்ளிகளில் தாய் மொழியோடு பிற இந்திய மொழிகள் மற்றும் அன்னிய மொழிகள் பயில விரும்புபவர்கள் விரும்புகின்ற வகையில் பயில சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.
* தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், வாரிசு வேலைகள் வழங்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
நுழைவுத் தேர்வு..
* மருத்துவ கல்வி பொது நுழைவுத் தேர்வு முறை தமிழகத்தில் அமுல்படுத்தப்பட மாட்டாது.
108 ஆம்புலன்ஸ்..
சில மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள, தமிழகத்தில் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் மேம்படுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ் ஊர்திகளின் எண்ணிக்கையை கூட்டி, நடைமுறையில் உள்ள நிர்வாக குறைகளை களைந்து சிறப்பாக செயல்படுத்தப்படும்.
பள்ளியிலேயே சாதிச் சான்றிதழ்...
ஒவ்வொரு வருடமும் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ் மற்றும் பள்ளி சார்ந்த இதர சான்றிதழ்கள் அனைத்தும் பள்ளியிலேயே வழங்கப்படும்.
* ஊக வணிகம் தடுக்கப்பட்டு, பதுக்கல் ஒழிக்கப்படும்.
* கருணாநிதியின் குடும்பத்தினர்களாலும், திமுக அமைச்சர்களாலும், அவர்களது கூலிப் படைகளாலும் மக்களை அநியாயமாக மிரட்டி பறிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்களை மீட்டு, அவற்றை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
* சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாலை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு திட்டம் நடைமுறை படுத்தப்படும்.
கோடம்பாக்கத்தை மீட்க...
திரைப்படத் துறையில் உள்ள பிரச்னைகளை ஆராய்ந்து, ஏற்பட்டுள்ள பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும். 
* நடைமுறையில் உள்ள மக்களுக்குப் பயன் அளிக்கும் திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

திமுக தேர்தல் அறிக்கை...19/32011

கடந்த முறை இலவச கலர் டிவி வழங்கப்பட்டதைப் போல, இம்முறை தாய்மார்களுக்காக இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி வழங்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
தாய்மார்கள் தங்கள் விருப்பம் போல் கிரைண்டரையோ அல்லது மிக்ஸியையோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அரங்கத்தில் சனிக்கிழமைதி.மு.க. தலைவரும் முதல்வருமான கருணாநிதி வெளியிட்டு அதனை வாசித்தார்.
அதன் முக்கிய அம்சங்கள்:
* மாநிலங்கள் சுயாட்சி பெறுவதற்கான அரசமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
* கல்வியை மாநில அரசின் பட்டியலில் கொண்டு வர வலியுறுத்துவோம்.
* கிராமத்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் பொது நுழைவுத் தேர்வை எக்காலத்திலும் நடத்த அனுமதியோம்.
* மத்திய அரசில் இருந்து மாநில அரசுக்கு கிடைத்து வருகின்ற வரி வருவாய் நியாயமான முறையில் கிடைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* செம்மொழியாயான தமிழை மத்திய ஆட்சிமொழியாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழை நீதிமன்ற மொழியாக்க நடவடிக்கை.
* மத்திய அரசு நடத்தும் தேர்வுகளை தமிழில் எழுத வலியுறுத்துவோம்.
* திருக்குறளை தேசிய நூலாக்க பாடுபடுவோம்.
இலவச டயாலிசிஸ்...
சிறுநீரக பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு இலவச ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை (டயாலிசிஸ்) அனைத்து மாவட்ட மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வழங்க வசதிகளைச் செய்வோம். ஏழைகளுக்கு இலவசமாகவும், மற்ற வருவாய்ப் பிரிவினருக்கு குறைந்த செலவிலும் இந்தச் சிகிச்சையை அளிக்க வசதிகளைச் செய்வோம்.
ஈழத் தமிழர்களுக்கு சமமான உரிமையும், ஆட்சியில் சம பங்கினையும் அளித்து அரசியல் தீர்வை எட்டுவதற்கு இலங்கையை அரசுடன் பேசி மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம்.

ஈழத்தமிழர்கள் அமைதியான சூழ்நிலையில் வாழ்வதற்கு உறுதியான நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொள்ளும் வகையில், இந்திய அரசு தீவிரமான முயற்சிகளை செய்ய வேண்டும் என வலியுறுத்துவோம்.

* வேளாண் உற்பத்தியை அதிகரிக்க சிறப்புத் திட்டம்.
* விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் நியாயமான வாடகையில் கிடைக்க நடவடிக்கை.

* இலவச மின்சாரத்தை தென்னை வளர்ப்பு, பணப்பயிர் மற்றும் தோட்டப்பயிர்களுக்கும் விரிவுபடுத்துவோம். 

* நெல், கரும்பு முதலியவற்றுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை.

* வறுமைகோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* விளைநிலங்களை வேறு பயன்பாட்டுக்கு செல்லாத வகையில் பாதுகாப்போம்.
* நகர்புறங்களில் நுகர்வோர் சந்தை அமைக்கப்படும்.
* படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.
* வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள குடும்பங்களை குறிப்பிட்ட காலங்களுக்கு பொருளாதார ஏற்றம் பெற நடவடிக்கை.
இலவச லேப்டாப்...
* அரசு கல்லூரிகளிலும், அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் தொழிற்கல்வி பயில வரும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியர்க்கு முதலாம் ஆண்டிலேயே இலவசமாக மடிக்கணினி (லேப்டாப்) வழங்குவோம்.

* மீனவர் நலனுக்கு சிறப்பு காப்பீடு திட்டம் கொண்டுவரப்படும்.
* விசைப்படகுக்கு மாதந்தோறும் மானிய விலையில் வழங்கும் டீசல் 1500 லிட்டரில் இருந்து 2000 லிட்டராகவும், நாட்டுப் படகுக்கு 300 லிட்டரிலிருந்து 500 லிட்டராகவும் வழங்க வகை செய்வோம்.
* மகளிர் சுய உதவி கடன் தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும். இதில், ரூ.2 லட்சம் மானியம்.
* தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வை காண மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
* திருப்பூர், கரூர், ஈரோடு போன்ற பகுதிகளில் சாயக் கழிவு நீரை ஆவியாக்கும் முறையை பயன்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்வோம்.
* திருச்சி, மதுரையில் மன நல மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
* மதுரையில் காசநோய் மருத்துவமனை.
* மருத்துவ கட்டண ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும்.
* அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 3 மாதங்களிலிருந்து 4 மாதமாக உயர்த்தப்படும்.
* எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மருத்துவம், கல்வி உள்ளிட்ட வசதிகள்.
* நடக்க முடியாத முதிய நோயாளிக்கு வீட்டிலேயே மருத்துவர் மூலம் சிகிச்சை பெற சிறப்பு நடவடிக்கை.
* தரமான இலவசக் கல்வியை அனைவருக்கும் வழங்கும் வகையில் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.
* அரசு பள்ளி மாணவர்களுக்கு மூன்று சீருடை.
* அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் வேலைவாய்ப்புகளை வழங்கும் படிப்புகளை அறிமுகம் செய்து, கல்வித் தரத்தை உயர்த்துவோம்.
* தமிழகத்தில் பல்கலைக்கழகமே இல்லாத மாவட்டம் இல்லை என்ற நிலையை எட்டுவோம்.
* திருமண நிதி உதவியை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்.
* கர்ப்பிணி பெண்களுக்கான உதவித் தொகை ரூ. 10 ஆயிரம் ஆக உயர்வு
* தமிழகத்தில் வெளிநாட்டு மொழிகளை கற்றுத் தர ஏற்பாடு.
* சேது கால்வாய் திட்டத்தை முடிக்க தொடர்ந்து பாடுபடுவோம்.
* முல்லைப் பெரியாறு, காவிரி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றுக்கு தீர்வு கண்டு தமிழக உரிமைகளுக்கு தொடர்ந்து வலியுறுத்துவோம்.
* மாநகர போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கோவை, மதுரை நகரில் புல்லட் ரயில் இயக்க நடவடிக்கை.
* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை மாமல்லபுரம் வரை நீட்டிப்போம்.
இலவச பஸ் பாஸ்...
* மூத்த குடிமக்களுக்கு இலவச உள்ளூர் பேருந்து பயணம். 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு அரசு உள்ளூர் பேருந்தில் கட்டணமில்லா பயணம். அதாவது இலவச பஸ் பாஸ்.
* முதியோர், ஆதரவற்ற பெண்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிக்கு மாத உதவித் தொகை ரூ.750 ஆக உயர்த்தப்படும்.
* தலித் கிறித்தவர்களும் ஆதிதிராவிடர் பட்டியலில் இடம்பெறுவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். சிறுபான்மை சமுதாயத்தினருக்கான ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை விரைவில் செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்துவோம். சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை மேலும் உயர்த்த பரிசீலிப்போம்.
* சிறுபான்மையினருக்கு சிறப்புக் கல்வித் திட்டம்.
* திருநங்கைகள் சுய உதவிக் குழு அமைக்கப்படும்.
இலவச அரிசி...
* பரம ஏழைகளான அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்குவோம். இதன் மூலம் 18.64 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள்.
* சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி வர்த்தகர்கள் ஈடுபட அனுமதி இல்லை.
* கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.75 ஆயிரம் மானியம் இனி ரூ.1 லட்ச ரூபாயாக உயர்த்தப்படும்.
* கலைஞர் காப்பீடு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* மணல் கடத்தல், அரிசி கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிப்பதற்கு சட்டரீதியான வழிவகை காண்போம்.
* அரசு அலுவலகங்களில் லஞ்சம் ஊழல் இல்லாத அளவுக்கு துரிதமான கண்காணிப்பு பணி.
* புதிய சென்னை துணை நகரம் உருவாக்குவோம்.
* ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
இலவசம் தொடரும் ...
* விடுபட்ட பயனாளிகள் அனைவருக்கும் தொடர்ந்து இலவச கலர் டி.வி., எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு வழங்கப்படும்.
* ஆறாவது ஊதியக்குழு மற்றும் ஒரு நபர் குழுவினால் களையப்படாமல் எஞ்சியிருக்கும் முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகளை விரைவாகக் களைவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வோம். மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களின் இறுதியில் அரசு பணியில் இருந்து ஓய்வு பெறுவோருக்கும் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கிடுவோம்.
* குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ அயோடின் உப்பு மானிய விலையில் வழங்குவோம்.
இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி...
தாய்மார்களின் சிரமங்களை பெரிதும் அறிந்துள்ள தி.மு.க. கடந்த முறை அவர்களுக்காக இலவச கலர் டி.வி. வழங்கியதுபோல இந்த முறை அவர்களுக்காக இலவச கிரைண்டர் அல்லது மிக்சி என்ற இரண்டில் ஒன்றை அவர்களது விருப்பம்போல வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம்.

அதிமுக தேர்தல் அறிக்கை...

தாய்மார்களுக்கு இலவச ஃபேன், கிரைண்டர், மிக்ஸி; மாணவர்களுக்கு லேப்-டாப்; குடும்ப அட்டைதாரர்களுக்கான ரூ.1 அரிசி இலவசமாக வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள், அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
அதிமுக தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று திருச்சியில் வெளியிட்டார்.
திமுக தேர்தல் அறிக்கையை விழுங்கிடும் அளவில் தனது வாக்குறுதிகளில் இலவச அறிவிப்புகளை அடுக்கியிருக்கிறார், ஜெயலலிதா. அதன் முக்கிய அம்சங்கள்:
வேளாண் திட்டங்கள்... 
* தமிழகத்தில் இரண்டாம் விவசாய புரட்சித் திட்டம் மக்கள் இயக்கமாக அறிவிக்கப்படும்.  .
* விவசாயியின் தனிநபர் வருமானத்தை 2 முதல் 3 மடங்குக்கு மேல் உயர்த்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். 30,000 ஹெக்டேர் நிலப்பரப்பை சிறப்பு சிறுபாசன திட்டத்தில் கொண்டு வருவோம்.
* கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு உதவும் வகையில் வழங்க இருந்த விவசாய கருவிகளை அத்தொழிலாளர்களுக்கு உதவுகிற வகையில் மீண்டும் விவசாய கருவிகளை இலவசமாக வழங்குவோம்.
* தரமான விதைகள், விவசாய இடுபொருள்கள் ஆகியவை தள்ளுபடி விலையில் விவசாயிகளுக்கு கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
* வன விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு தாமதமின்றி இழப்பீடு கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். வன விலங்குகள் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
* மதிப்பு கூட்டப்பட்ட விவசாயத்தை தொழிலாக அறிவிக்கப்பட்டு - உணவு பதப்படுத்தும் சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு, விவசாயிகள் விவசாய நிறுவனங்களில் பங்குதாரர்கள் ஆக்கப்படுவார்கள்.
* அனைத்து மாவட்டங்களிலும் தேவைக்கேற்ற குளிர் பதன கிடங்குகள் ஏற்படுத்தப்படும்.  விவசாய விளை பொருள்கள் சேகரிப்பு நிலையங்களை நவீனப்படுத்துவோம்.
ரூ.1 அரிசி இலவசமாக..
குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடரும் என்ற நிலையை மாற்றி பயனாளிகள் அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.
* கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு 2,500/- ரூபாயாக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனப்படுத்தப்பட்டு, நிர்வாகம் சீரமைக்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக அரசு மற்றும் தனியார் அரசு ஆலைகள் கொள்முதல் விலையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 
* நுண்ணிய வேளாண்மை திட்டத்தை செம்மைப்படுத்தி, அதன் மூலம் விவசாயிகளை பங்குதாரர்களாகக் கொண்ட விவசாய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, சொட்டு நீர்ப் பாசன வசதி அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்.
* ஆண்டுக்கு 7 லட்சம் டன் பருப்பு உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பருப்பு கொள்முதல் கொள்கையை உருவாக்கி, தர வேறுபாடு இல்லாமல் துவரம் பருப்பு கிலோ 35 ரூபாய் முதல்
40 ரூபாய்க்குக் குறையாமல் கொள்முதல் செய்யப்படும். உற்பத்தித் தள்ளுபடியாக 300 கிலோ பருப்புக்கு உற்பத்தி செலவு ஊக்கத் தொகையாக 500 ரூபாய் வழங்கப்படும்.
* குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் பருப்பு, மசாலா பொருட்கள், சமையல் எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் நியாய விலைக் கடைகள் மூலம் அனைத்து நுகர்வோருக்கும் வேறுபாடு இல்லாமல் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
சுத்திகரிக்கப்பட்ட தூய குடிநீர் திட்டம்...
* வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடி தண்ணீர் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் 5.6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு புதிதாக உருவாக்கப்படும்.
* புதிதாக 1 லட்சம் பேருக்கு போக்குவரத்துத் துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இதன் மூலம் 20,000 தொழிற்சாலைகள் உருவாக வாய்ப்பு ஏற்படும்.
அனைவருக்கும் தரமான மருத்துவம்...
* குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சீரமைக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
* அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மருத்துவமனைகளில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ மற்றும் பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
* கிராமங்கள் தோறும் நடமாடும் மருத்துவமனை கிராமத்துக்கே வரும் உன்னத திட்டம் செயல்படுத்தப்படும்.
* 1500 கிராமங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தொலை தூர மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும்.
நவீன பசுமை வீடு...
* கருணாநிதியின் வீட்டு வசதித் திட்டம் நடைமுறை சாத்தியம் இல்லாத வகையில் இருப்பதாலும் மற்றும் மக்களுக்கு மேலும் நிதிச் சுமையை ஏற்றக் கூடிய ஏமாற்று வேலை என்பதாலும், அதிமுக அரசு நவீன பசுமை வீட்டு வசதித் திட்டத்தை அறிமுகப்படுத்தும்.
அதன்படி, அனைவருக்கும் குறைந்த விலையில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள, சூரிய சக்தி மின்சார பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்.
வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் 3 லட்சம் மக்களுக்கு 300 சதுர அடியில் 1,80,000/- ரூபாய் செலவில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். மேலும் 40 லட்சம் நடுத்தர வகுப்பு மக்களுக்கு இத்திட்டம் 1 லட்சம் ரூபாய் மானியத்துடன் விரிவாக்கம் செய்யப்படும். 
வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்ட 3 சென்டில் இடம் அளிக்கப்படும்.
இருண்ட தமிழகம் ஒளி பெற..
* இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்படும். மின்சார வாரியம் திருத்தி அமைக்கப்பட்டு, மின் விநியோகம் சீராக்கப்பட்டு, மின் திருட்டு தடுக்கப்படும். வீடு, தொழில் மற்றும் விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
* அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சார இணைப்பு மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
மின்சார திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டு மின்சார பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.
* வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் வீடுகளுக்கு சூரிய ஒளி மூலம் தடையில்லா மின்சார வசதி இலவசமாக வழங்கப்படும். கிராமப்புற தெரு விளக்குகள் சூரிய ஒளி மின்சாரத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
    
சிறப்பு உணவுப் பூங்கா...
* விவசாய உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் பூங்காக்கள், குளிர்பதன கிடங்குகள், தொழிற் பூங்காக்கள் மாவட்டத்தில் அமைக்கப்படும்.
* குறைந்த விலையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் அனைத்து விவசாய விளை பொருட்களும் மக்களுக்கு விரைந்து கிடைக்கின்ற வகையில் நவீன மக்கள் சந்தைகள் மற்றும் பொருட்களை பதப்படுத்தப்பட வேண்டிய குளிர்சாதன வசதிகள் செய்து தரப்படும்.
* விவசாயிகளை பங்குதாரர்களாகக் கொண்ட 6 ஆடை அலங்கார சிறப்பு பொருளாதார மண்டலங்கள் துவக்கப்படும். இதன் மூலம் தமிழ் நாட்டில் 70 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
ஆடு, மாடுகள் இலவசம்...
* மீண்டும் ஒரு வெண்மை புரட்சியை உருவாக்க திட்டம் தீட்டப்படும். 2016ஆம் ஆண்டுக்குள் 6000 கிராமங்களில் சீரமைக்கப்பட்ட பால் பண்ணைகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பால் உற்பத்தியை தினமும் 2.5 மில்லியன் லிட்டரில் இருந்து 10 மில்லியன் லிட்டராக பெருக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அதை ஊக்குவிக்கும் வகையில் 6000 கிராமங்களில் சுமார் 60,000 பால் கறவை மாடுகள் இலவசமாக வழங்க வழிவகைகள் செய்யப்படும்.
* வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். கால்நடை வளத்தைப் பெருக்கும் வகையில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.
அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்...
* மாணவர்களின் புத்தகச் சுமை குறைக்கப்படும். தரமான, இலவச கல்வி அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
* மாணவர்களுக்கு 4 சீருடைகளும், காலணிகளும் இலவசமாக வழங்கப்படும்.
* 10-12ஆம் வகுப்பு வரை வேறுபாடு இல்லாமல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக 1,000/- ரூபாய் முதல் 5,000/- ரூபாய் வரை வழங்கப்படும்.
* பள்ளியில் படிக்கும் +1 மற்றும் +2 மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் இலவசமாக வழங்கப்படும்.
* அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் (கலை, அறிவியல் மற்றும் பொறியியல்) மற்றும் பல் தொழில் பட்டய கல்லூரிகளில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப் டாப் கம்ப்யூட்டர் வழங்கப்படும்.
மீனவர்களுக்கு கூடுதல் நிதி...
* மீனவர் பாதுகாப்பு படை அமைக்கப்படும்
* இயந்திர மீன்பிடி படகுகள் வாங்கத் தேவையான மானியம் வழங்கப்படும்.
* மீன் உற்பத்திக்கு உகந்த வழியில் மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்பட்ட 45 நாட்களில், மீனவ குடும்பத்திற்கான உதவித் தொகை 2,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
* பருவ காலத்தால் 4 மாதங்களுக்கு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இயலாத சூழ்நிலையில் இருக்கும் மீனவ குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4,000/- ரூபாயாக வழங்கப்படும்.
* கச்சத் தீவை மீட்டெடுத்து தமிழக மீனவர் நலன் காக்கப்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறுபான்மையினர்களுக்கு சிறப்புத் திட்டம்...
* தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகி உள்ள துறைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் வேலை வாய்ப்புக்கு தகுதி உடையவர்களாக உருவாக்கப்படுவர்.
* தொழில் தொடங்க முனைவோருக்கு 25 சதவீத மானியத்தில் கடன் உதவித் தொகை வழங்கப்படும். அரசுப் பணியில் காலி இடங்கள் நிரப்பப்படும். புதிய வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
* ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ் மாணவர்களுக்கு தங்கும் விடுதிகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். உணவு கட்டணம் மற்றும் உதவித் தொகைகள் கூட்டி வழங்கப்படும்.
இளைஞர்களுக்காக...
* படித்த இளைஞர்கள், இளம் பெண்களுக்கு தொழில் முனைவோருக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, லாப நோக்கத்துடன் சுய தொழில் தொடங்க - அரசு பங்குத் தொகை தகுதிக்கேற்ப 25 லட்சம் ரூபாய் வரை அளித்து, வங்கிக் கடன் ஏற்பாடு செய்து தரப்படும்.
* வீடுகளில் நடைபெறும் திருட்டு, கொள்ளைகளை முற்றிலும் தடுக்க தற்காப்பு கலை பயின்ற இளைஞர்களைக் கொண்டு சிறப்பு சுய பாதுகாப்பு படைகள் அமைக்கப்படும். அவர்கள் சம்பவம் நடக்கும் இடத்திற்கு விரைந்து வந்து தடுத்து பாதுகாக்க நவீன முறைகளுடன் பயிற்சி அளிக்கப்படும். வீட்டை பூட்டி வெளியூர் செல்லும் மக்களின் வீடுகளும் பாதுகாக்கப்படும்.
சுய உதவிக் குழு சிறப்புத் திட்டம்..
* சுய உதவிக் குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.  அதில் 25 சதவிகிதம் வரை மானியம் வழங்கப்படும்.
* திருநங்கைகளுக்கான சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரையிலான மதிப்பீட்டில் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும்.
ஃபேன், மிக்ஸி, கிரைண்டர் ஃப்ரீ...
* தாய்மார்களுக்கு ஒரு ஃபேன், ஒரு மிக்ஸி, ஒரு கிரைண்டர் ஆகிய மூன்று பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
* குழந்தையை பேணி பாதுகாக்க பணிபுரியும் தாய்மார்களுக்கு மகப்பேறு காலச் சலுகையாக 6 மாத விடுமுறையும், 12,000/- ரூபாய் நிதி உதவியும் வழங்கப்படும்.
இலவச பஸ் பாஸ்...
* 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அரசு பேருந்துகளில் பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.
இலங்கை தமிழ் அகதிகளுக்கு...
* இலங்கை தமிழ் அகதிகளுக்கு தரமான இருப்பிடம், தண்ணீர் மற்றும் சுற்றுப்புற சுகாதார மேம்பாடு போன்றவை வழங்கப்படும். தரமான மருத்துவ வசதி செய்து தரப்படும்.  கல்வி பயில தேவையான உதவிகள், சிறப்பு வேலை வாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.
* அகதிகளாக வந்தவர்கள் தமிழகத்திலே கௌரவமாக வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
* இலங்கை தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டில் அடிமைகள் போல் வாழும் நிலைமையை மாற்ற மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
* இலவச திட்டங்கள் இலங்கை தமிழ் அகதிகள் முகாமுக்கும் நீட்டிக்கப்படும். 
நவீன நீர்வழிச் சாலை..
* தமிழக நதிகளை நீர்வழிச் சாலைகள் மூலம் இணைத்து, தண்ணீர் வீணாகாமல், வெள்ளப் பெருக்கு நீரையும் வரைமுறைப்படுத்தி மற்றும் தேக்கி, தேவையான பாசனப் பகுதிக்கு, தேவையான பொழுது பயன்படுத்துவோம். நவீன நீர்வழிச் சாலைக்கு உலக வங்கி கடன் பெற்று செயல்படுத்தப்படும்.
* காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
* அண்டை மாநில நதி நீர் பிரச்சினைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண நல்லிணக்க நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும். 
* முல்லை பெரியாறு மற்றும் அனைத்து நதி நீர் பிரச்சினைகளை தீர்க்க நிலையான தீர்வு எட்ட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ் மொழிக்காக...
* தமிழை இந்திய ஆட்சி மொழியாக்க மத்திய அரசை வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 
* தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும்.
* கணினி வழித் தமிழ் வளர்ச்சிக்கும், ஆராய்ச்சி மேம்பாட்டிற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தனித் தன்மையை இழந்த தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களை சீரமைத்து, தமிழ் மொழி உலகம் எல்லாம் பரவும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழ் மொழியை நீதிமன்றங்களில் நீதித் துறையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* அரசு ஊழியர்களுக்காக...
* அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி வரன்முறை உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்போது நிறைவு செய்யப்படும்.
* அரசு நிர்வாகத்தில் இருக்கும் துறை மற்றும் நிர்வாக ரீதியான பணி சிக்கல்கள் ஆராயப்பட்டு அவற்றை சீராக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்கள் தற்போது அனுபவித்து வரும் அனைத்து சலுகைகளும் தொடரும்.
மாற்றுத் திறனாளிகளுக்காக...
* மாற்றுத் திறனாளிகளுக்கென 3 சதவீத இட ஒதுக்கீடு அரசுப் பணியில் ஒதுக்கப்படும்.  அதை உடனடியாக அரசு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். 
கேபிள் டிவி அரசுடமை... 

தமிழகத்தில் கேபிள் டிவி தொழில் அரசுடமையாக்கப்படும்; ஏகபோகம் தடுக்கப்படும்.  அனைவருக்கும் தொழில் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.
* அனைத்து மக்களுக்கும் அரசு கேபிள் டிவி இணைப்பு அரசு மானியத்துடன் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். டிடிஎச் சேவைகள் மக்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* கேபிள் டிவி மூலமாக கடைசி மைலில் வீட்டுக்கு இணைப்பு கொடுப்பவர்களது தொழில் பாதுகாக்கப்படும். அவர்கள் தொடர்ந்து தொழில் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலை வாய்ப்பு...
* செயல்படாத கிராமப்புற பிபிஓ மையங்களின் இன்றைய வடிவத்தை மாற்றம் செய்து, மாவட்டம் தோறும், கிராமங்களில் 150 கிராமப்புற பிபிஓ மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்களுக்கு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலமாக வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும்.  இதன் மூலம் 15,000 இளைஞர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும், 1 லட்சம் கிராமபுற மக்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மோனோ ரயில் திட்டங்கள்..
சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூருக்கு சிங்கப்பூரில் உள்ளபடி மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
திருமண உதவித் தொகை...
* தற்போது வழங்கப்பட்டு வரும் 25,000/- ரூபாயுடன், தங்கத்தின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, 4 கிராம் (1/2 சவரன்) தங்கம் மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.
* இளநிலை அல்லது டிப்ளொமா பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகை 50,000/- ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.
சட்டம் ஒழுங்கு கண்டிப்பு... 

* சட்டம் ஒழுங்கு கண்டிப்பாக எவ்வித தயவு தாட்சண்யமும் இல்லாமல் நிலை நாட்டப்படும். 
* மக்கள் அமைதியாக வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். 
காவல் துறையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
* முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்.) உடனடியாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* பணியில் மரணமடையும் காவலர்களுக்கு - கருணைத் தொகை 3 லட்சம் ரூபாய் அளவிற்கு உர்த்தப்படும்.
திருப்பூர் சாயக் கழிவு..
* திருப்பூர் சாயக் கழிவு பிரச்னையை பரிசீலித்து அதன் கழிவுகளை சுத்திகரிக்கத் தேவையான தொழில்நுட்பத்துடன் விஞ்ஞான வழியில் கழிவு அகற்றும் நிலையம் உருவாக்கப்படும்.
முதியோருக்கு கூடுதல் உதவித் தொகை...
* முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு மாத உதவித் தொகை 1,000/- ரூபாய் அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும். 
* அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு அரசு மானியம் இரண்டு மடங்காக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவைக்கு ஏற்றபடி அரசு விடுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுத்துவதோடு, அவைகளின் கூட்டமைப்புகள்,
பிற மொழி பயிற்சி... 

* பள்ளிகளில் தாய் மொழியோடு பிற இந்திய மொழிகள் மற்றும் அன்னிய மொழிகள் பயில விரும்புபவர்கள் விரும்புகின்ற வகையில் பயில சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.
* தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், வாரிசு வேலைகள் வழங்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
நுழைவுத் தேர்வு..
* மருத்துவ கல்வி பொது நுழைவுத் தேர்வு முறை தமிழகத்தில் அமுல்படுத்தப்பட மாட்டாது.
108 ஆம்புலன்ஸ்..
சில மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள, தமிழகத்தில் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் மேம்படுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ் ஊர்திகளின் எண்ணிக்கையை கூட்டி, நடைமுறையில் உள்ள நிர்வாக குறைகளை களைந்து சிறப்பாக செயல்படுத்தப்படும்.
பள்ளியிலேயே சாதிச் சான்றிதழ்...
ஒவ்வொரு வருடமும் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ் மற்றும் பள்ளி சார்ந்த இதர சான்றிதழ்கள் அனைத்தும் பள்ளியிலேயே வழங்கப்படும்.
* ஊக வணிகம் தடுக்கப்பட்டு, பதுக்கல் ஒழிக்கப்படும்.
* கருணாநிதியின் குடும்பத்தினர்களாலும், திமுக அமைச்சர்களாலும், அவர்களது கூலிப் படைகளாலும் மக்களை அநியாயமாக மிரட்டி பறிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்களை மீட்டு, அவற்றை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
* சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாலை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு திட்டம் நடைமுறை படுத்தப்படும்.
கோடம்பாக்கத்தை மீட்க...
திரைப்படத் துறையில் உள்ள பிரச்னைகளை ஆராய்ந்து, ஏற்பட்டுள்ள பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும். 
* நடைமுறையில் உள்ள மக்களுக்குப் பயன் அளிக்கும் திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். 

திங்கள், 21 மார்ச், 2011

தமிழ்நாட்டின் கடன் ஒரு லட்சம் கோடி..

கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பது பல காலத்துக்கு முன்பே கம்பன் சொன்ன உதாரணம். அப்படி ஒரு கலக்கம் தமிழக அரசுக்கு ஏனோ இன்னமும் வரவே இல்லை. ‘கடன் அன்பை முறிக்கும்’ என்பதும் பழங்காலத்து மொழி. தமிழ் நாட்டையே இந்தக் கடன், தலைகீழாகக் கவிழ்க்கக் காத்திருக்கிறது. 10 ஆயிரம் கைமாற்றாக வாங்கியவர்கள், திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றால் பதறிப் போவதும்… வாங்கிய வீட்டுக் கடனை ஒரு மாதம் ஒழுங்காக அடைக்க முடியாமல் போனால், வங்கிக்காரர்களைப் பார்த்துப் பதுங்க ஆரம்பிப்பதும், மத்திய தர வர்க்கத்தின் அன்றாட வழக்கம். கிராமப்புறங்களில், கூட்டுறவுக் கடனை வசூலிப்பதற்காக அதிகாரிகள் வரும்போது, வயல் காடுகளை நோக்கி ஓடிப் போய் விவசாயிகள் பதுங்கிக்கொள்வார்கள். அவர்களைப் பிடிக்க நிலங்களுக்குள் அதிகாரிகளும் ஓடுவார்கள். இதைவைத்து எழுதப்பட்ட கி.ராஜநாராயணனின் ‘கதவு’ கதை கண்ணீர் வரவைக்கும். அசலையும் வட்டியையும் செலுத்த முடியாத விவசாயியின் வீட்டில் இருந்த நிலைக் கதவை அதிகாரிகள் எடுத்துச் செல்வதை உருகி உருகி எழுதி இருப்பார்.
‘அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றக் கெடும்’ என்ற வள்ளுவரின் குறளுக்குத் ‘தன் செல்வத்தின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை பல வளமும் இருப்பதுபோல் தோன்றி, இல்லாமல் மறைந்து கெட்டுவிடும்’ என்று மு.வ. முதல் மு.க. வரைக்கும் விளக்கம் சொல்லி இருக்கிறார்கள். இவ்வளவுக்குப் பிறகும் வெளிவந்துஇருக்கும் ஒரு செய்தி, பதறவைக்கிறது!
தமிழ்நாட்டின் இன்றைய மொத்தக் கடன் ஒரு லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது. சரியாகச் சொன்னால், 1,01,541 கோடி! ‘நான் கடன் வாங்குறதும் இல்ல… கொடுக்கிறதும் இல்ல’ என்று சில ஜென்டில்மேன்கள் சொல்வார்கள். நீங்கள் வாங்காவிட்டால் என்ன, உங்களுக்கும் சேர்த்துதான் நாங்கள் வாங்குகிறோமே என்று அரசாங்கம் செய்தது எல்லாம் இப்போது தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஊரெல்லாம் கடன் வாங்கிக் கொண்டு… யாரெல்லாம் கடன் தருவார்களோ, அவர்கள் அத்தனை பேரிடமும் கடன் வாங்கிக்கொண்டு, ‘தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் உறுதியான பொருளாதார வளர்ச்சித் திட்டங்களின் காரணமாக, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி வலுவாக உள்ளது’ என்று நிதி அமைச்சர் அன்பழகன் எப்படிச் சொல்கிறார் என்றே தெரியவில்லை.

இன்றைய தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனையாகச் சொல்லப்படுவது, இலவசங்கள்தான். மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இலவசங்களாகவோ, மானியமாகவோ வழங்கி னால், அதை மக்கள் நலத் திட்டம் என்று நினைத்து, தொடர்ச்சியாகச் செய்துவருகிறார்கள். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்பது இதில் கவர்ச்சிகரமான முதல் திட்டம். மார்க்கெட் மதிப்பில் ஏழுக்கு விற்பனையாகும் அரிசிக்கு அரசாங்கம் ஆறு கொடுத்து விடுகிறது. மீதி ஒன்றுதான் பொது மக்களின் பாக்கெட்டில் இருந்து தரப்படுகிறது. இந்த அரிசியை வாங்கியவர்கள் அனைவரும் சாப்பிடுகிறார்களா என்றால், இல்லை. அதிக விலைக்கு வெளியில் விற்று, சம்பாதிப்பவர்களும் உண்டு. அல்லது மாவு மிஷின் ஆட்கள் இதை மொத்தமாக வாங்கி, அரைத்து விற்றுச் சம்பாதிக்கவும் செய்கிறார்கள். இந்த அரிசியை வாங்குபவர்களில், அதிகபட்சம் 25 சதவிகிதம் பேர்கூட இதைப் பொங்கிச் சாப்பிடவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
அடுத்த கவர்ச்சித் திட்டம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி. 80 லட்சம் குடும் பங்கள் வரை இந்த கலர் டி.வி-யை வாங்கி இருக்கிறார்கள். இதை வைத்துப் பார்த்தால், 2006-க்கு முன்னால் தமிழ்நாட்டில் முக்கால் சதவிகித வீடுகளில் டி.வி-யே இல்லையா என்ன? இருக்கும் வீடுகளுக்கே இவர்களும் கொடுத்தார்கள். ஒரே வீட்டில் இரண்டு மூன்று டி.வி-க்கள் வரை இதனால் குவிந்தன. இவையும் அதிகபட்சம் 3,000 வரை விலை போனது.
நாடு முழுவதும் உணவுப் பொருட்களின் விலை அநியாயமாக எகிறியது. விலை ஏன் திடீரென உயர்கிறது, அதைக் கட்டுப்படுத்துவது எப்படி என்றெல்லாம் ஆலோசனை செய்யாமல், நியாய விலைக் கடைகளில் மலிவு விலையில் மளிகைப் பொருட்களை அரசாங்கம் வழங்கியது. கலர் டி.வி-யைப்போலவே இலவச எரிவாயு இணைப்பும் அடுப்பும் தருவது தி.மு.க-வை வெற்றி பெறவைத்த வாக்குறுதிகளில் ஒன்று. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ‘கலைஞர் காப்பீட்டுத் திட்டம்’ மற்றும் ‘கலைஞர் கான்கிரீட் வீடு கட்டும் திட்டம்’ ஆகிய இரண்டும் மக்களை ஏக்கப் பார்வை பார்க்கவைத்துள்ளன. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால், பொதுமக்கள் அடைந்த பயனைவிட, தனியார் மருத்துவமனைகள் அடைந்த பயன்கள்தான் அதிகம். தேவை இல்லாமல் ஆபரேஷன்கள் செய்கிறார்கள் என்று ஒரு புறமும்… இன்று ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்கு அரசாங்கம் தரும் இன்ஷூரன்ஸ் பணம் சொற்பமானது என்று மறுபுறமும் கவலை ரேகைகள் படர்ந்து வருகின்றன. கான்கிரீட் வீடுகள் கட்ட அரசாங்கம் தரும் 75 ஆயிரம், இன்றைய நிலையில் நிலம் தோண்டி சுற்றுச் சுவர் எழுப்புவதற்குக்கூடப் போதுமானது அல்ல. இப்படிப்பட்ட இலவசத் திட்டங்களுக்காகத்தான் கோடிக்கணக்கான பணத்தை அரசாங்கம் கடனாக வாங்குகிறது.
”கடன் வாங்காதே என்று சாதாரணமாக எல்லோரும் சொல்வார்கள். ஆனால், இந்தக் கடனில்தான் தமிழகம் வாழ்கிறது” என்று சொல்கிறார் நிதி அமைச்சர். ”இம்மாதிரியான கடனால் தமிழகம் வாழவில்லை. தி.மு.க-தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறது” என்று எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அதைத் தருவோம்… இதைத் தருவோம்… என்று வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சியைப் பிடித்தார் கருணாநிதி. இலவசங்களால் நிரம்பிய அந்த அறிக்கைக் குத்தான், ‘தேர்தல் கதாநாயகன்’ என்று நிதித் துறையில் கரை கண்ட ப.சிதம்பரம் பட்டமும் கொடுத்தார். அத்தனைப் பொருட்களையும் அரசாங்கமே கொடுத்துவிடும் கம்யூனிச சமுதாயத்தை நோக்கிய பயணமாக இதைக் கருணாநிதி பார்த்தது காலத்தின் கோலம்.
”இலவசம் என்பது கேலிக்கு உரியதல்ல. ஒரு காலத்தில் இலவசம் எவ்வளவு பெருமைக்கு உரியதாக இருந்தது தெரியுமா? மேல் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு தான தர்மம் கொடுப்பதுதான் இந்த உலகத்திலேயே பெரிய புண்ணியமாகச் சொல்லப்பட்டது. ஆக, மேல் சாதிக்கு தான தர்மம் கொடுத்தால் சரியானது. ஏழைகளுக்குக் கொடுத்தால் அது கேலியா?” என்று நிதி அமைச்சர் அன்பழகன் கேட்கிறார். அரசாங்கம் இப்போது வழங்கும் அத்தனை இலவசங்களும் சலுகைகளும் ஏழை களுக்கு மட்டும்தான் போய்ச் சேர்கின்றனவா? ஆளும் நாற்காலியைப் பிடித்திருக்கும் ஒரு கட்சி, தனக்கு வாக்கு அளித்த மக்களுக்கு, அல்லது வாக்களிக்கப் போகும் மக்களுக்குத் தரும் மறைமுக ‘லஞ்சமாகவே’ இந்த இலவசங்கள் இருக்கின்றன என்பதை யாரால் மறுக்க முடியும்? ”ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் இவை அனைத் தையும் நிறுத்திவிடுவார்” என்று துணை முதல்வர் ஸ்டாலின் ஊர் ஊராகச் சொல்லி வருவதே உண்மைக் காரணத்தை உணர்த்திவிடுகிறது.
கருணாநிதியைப் பற்றி கேள்வி கேட்டால், ஜெயலலிதா பற்றி பதில் சொல்வதுதான் இன்றைய பாணி. ‘ஒரு லட்சம் கோடி கடன் வைத்து இருக்கிறீர்களே? இது நியாயமா?’ என்று எதிர்க் கட்சிகள் சட்டசபையில் கேள்வி கேட்டார்கள். ‘ஜெயலலிதாவும் அவரது ஆட்சியில் கடன் வாங்கத்தான் செய்தார்’ என்று அன்பழகன் பதில் அளித்துள்ளார். 2001-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியை விட்டு விலகும்போது, வைத்துவிட்டுப்போன கடன் 28 ஆயிரம் கோடி.
2006-ம் ஆண்டு ஜெயலலிதா பதவி விலகும் போது, அதை 56 ஆயிரம் கோடியாக மாற்றினார். கருணாநிதியின் ஆட்சிக் காலம் இப்போது முடியும்போது, அது ஒரு லட்சத்தைத் தாண்டி இருக்கிறது. வாங்கிய கடனைக் கட்டவில்லை, அதற்கான வட்டியும் அபராத வட்டியும் செலுத்தவில்லை, மேலும் புதிதாகக் கடன் வாங்கியிருக்கிறார்கள். இந்த மூன்றும் சேர்ந்து தான் எகிறியிருக்கிறது.
”உணவு மானியமாக 4,000 கோடி போய்விடுகிறது. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்துக்கு 2,632 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. மின்சார வாரியத்துக்கு மான்யம் 681 கோடி, முதியோர் பென்ஷனுக்காக 1,379 கோடி. இப்படியே ஆண்டுதோறும் செலவு கூடிக்கொண்டே போவதால்தான், பழைய கடன்களை நம்மால் கட்டவும் முடியவில்லை. இவை எதுவும் லாபம் வரக் கூடிய தொழில்கள் அல்ல. அடுத்த ஆண்டுக்கு மறுபடியும் கடன் வாங்கியே இதற்கும் ஒதுக்க வேண்டியிருக்கிறது” என்று நிதித் துறை அதிகாரி சொல்கிறார்.
மத்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ள பொறுப்புரிமைச் சட்டத்தின் படி, ஒரு மாநில அரசாங்கம் அதன் உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதத்துக்கு மேல் கடன் வாங்கக் கூடாது என்று இருக்கிறது. ஆனால், அதை எல்லாம் தமிழ்நாடு தாண்டிவிட்டது. தேர்தல் நெருங்கி வருவதால் பயம் அதிகமாகிறது. கிரைண்டர் தருவோம், மிக்ஸி தருவோம்… என்று எந்தக் கட்சி வாக்குறுதி தந்தாலும், அது இலவசம் அல்ல. உங்களுக்கே தெரியாமல் உங்கள் பெயரைச் சொல்லி கடன் வாங்கித்தான் தருகிறார்கள்.
இவர்கள் போதாது என்று மத்திய அரசாங்கம் வாங்கும் கடன் கணக்கு மலைப்பை ஏற்படுத்தும். இந்தியாவின் சமீபத்திய கடன் 31 லட்சத்து 6 ஆயி ரத்து 322 கோடி. சராசரி இந்தியனின் ஆண்டு வருமானம் 38 ஆயிரம் என்று வைத்துக்கொண்டால், அவனது 10 மாதச் சம்பளம் கடனாக உள்ளது என் கிறார்கள்.
‘மன்மோகன் சிங்கைவிட நான் பரவாயில்லை’ என்று கருணாநிதி சொல்லிக்கொள்ளலாம்.
நமக்கென்ன பேசவா தெரியாது!

எம்.ஆர்.வெங்கடேஷ் (ஆடிட்டர்)

”நான் கடன் வாங்குவதைக் குறை சொல்ல வில்லை. எதற்கு செலவு செய்கிறார்கள் என்பதைத் தான் கண்டிக்கிறேன். சாலைகள், பள்ளிகள், மருத் துவமனைகள் அமைப்பது தவறில்லை. ஆனால், டி.வி. கொடுப்பது போன்ற சமுதாய ஆடம்பரங்களால் இந்த நாட்டுக்குத்தான் நஷ்டம்.
ஒரு லட்சம் கோடிக்கு ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடி வரைக்கும் நாம் வட்டி கட்ட வேண்டும். இந்த வட்டியை வைத்தே எத்தனையோ நலத் திட்டங்களைச் செயல்படுத்தலாம். எத்தனை தலைமுறை ஆனாலும் இந்தக் கடனையும் வட்டியையும் நாம் திருப்பிச் செலுத்தித்தான் ஆக வேண்டும். இதை அரசாங்கம் முதலில் உணர வேண்டும். அதைவிட, மக்களும் உணர வேண்டும். குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடியை 2007-ம் ஆண்டு நான் சந்தித்தபோது, ‘நான் ஆட்சிக்கு வந்தால் முறைப்படி வரி போடுவேன். அதைத் செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பு வேன்’ என்று சொன்னார். ‘உங்களை எதிர்த்து நிற்கும் கட்சி டி.வி. தரப் போவதாகச் சொல்கிறதே?’ என்றதும், ‘எங்கள் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள்’ என்றார். அதே மாதிரியே மோடி வென்றார். இலவசங்களை ஏற்க மாட்டோம் என்ற மனோபாவம் மக்களுக்கு வேண்டும். இலவசமாகச் சோறு போட்டால் ராத்திரி வரைக்கும் வேலை வாங்கப் போகிறார்கள் என்று அர்த்தம். அது போன்ற பூதாகரமான சோதனை பொதுமக்களுக்குக் காத்திருக்கிறது.
அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்கும்போது படிப்படியாக அனைத்து திட்டப் பணிகளும் பாதிக்கும். நாம் அடுத்து சந்திக்கப் போகும் நெருக்கடி அதுவாகத்தான் இருக்கும். வட்டி நின்று கொல்லும் என்பார்கள். அந்த நாள் நெருங்கிக்கொண்டு இருக்கிறது!”

பாலபாரதி (மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ)

”கடன் வாங்கி மின் உற்பத்தி, விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்குப் பயன்படுத்தியிருந்தால் வரவேற்கலாம். வளர்ச்சித் திட்டங்களுக்குக் கடன் வாங்குவதாகச் சொல்லி, கவர்ச்சித் திட்டங்களுக்குத்தான் பயன்படுத்துகிறார்கள். எந்தத் திட்டங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற தீர்க்க சிந்தனை இல்லாததுதான் இதற்குக் காரணம். எத்தனையோ குடிநீர்த் திட்டங்கள் நிதி இல்லாமல் கிடக்க… அனைவருக்கும் டி.வி. கொடுத்து முடித்துவிட்டார்கள்.
அடுத்துச் சொல்ல வேண்டிய குறைபாடு, வருமான வழிமுறைகளைச் சரியாகப் பயன் படுத்தவில்லை. ஒரு யூனிட் மணலை பொதுப்பணித் துறையில் இருந்து 900 -க்கு வாங்கி, 14 ஆயிரத்துக்கு தனியார் விற்பனை செய்கிறார்கள். அரசாங்கத்துக்கு வர வேண்டிய
ஆதாயம் தனியாருக்கு செல்கிறது. இந்த மணல் கொள்ளையைத் தடுத்து இருந்தால் இந்த அளவுக்குக் கடன் வாங்கிஇருக்கவே தேவையில்லை!

வியாழன், 10 மார்ச், 2011

ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல் !!!

.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம்.
உங்களை நினைத்தால் ஒரு பக்கம் வியப்பாகவும், இன்னொரு பக்கம் வேதனை​யாகவும் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இது ஓர் ஆணாதிக்க உலகம். நீங்கள் இருந்த திரைப்பட உலகமும், இருக்கும் அரசியல் உலகமும் முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் மோசமான ஆளுகைக்கு ஆட்பட்டவை. 1964-ல் ஸ்ரீதரின் 'வெண்ணிற ஆடை’ படத்தில் முதன் முதலாக நீங்கள் அறிமுகமானபோது, தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் முதலமைச்சர் நாற்காலியில் ஒரு நாள் அமரக்​கூடும் என்று கண்ணுறக்க வேளையில் கனவு​கூடக் கண்டிருக்க மாட்டீர்கள்! தமிழர்களின் ரசனை எல்லா வகையிலும் வித்தியாசமானது. திரைப்படங்களில் நாயக, நாயகியராய் இணைந்து நடித்த இருவரையும் முதல்வர் நாற்காலியில் அமரவைத்து அழகு பார்த்த வரலாற்றுச் சாதனை, உலகில் தமிழகத்தைத் தவிர வேறெங்கும் வாய்த்ததே இல்லை.

2176838929_30c714cf74_b
எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இருவரின் ஆதிக்கத்தில் கட்டுண்டுக் கிடந்த திரையுலகில் அடியெடுத்துவைத்த நீங்கள், இரு வேறுபட்ட குணாம்சங்கள்கொண்ட அந்தக் கலையுலகச்சிகரங்களோடு கைகோத்து உங்கள் தோற்றப் பொலிவினாலும், நடிப்புத் திறமையாலும் முதன்மைக் கதாநாயகியாக முன்னேறியதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், கதாநாயகிக் கட்டம் முடிந்ததும் தமக்கையாய், தாயாய் வேடம் பூண்டு காலம் முழுவதும் ஒரு நடிகையாகவே வாழ்ந்து முடித்துவிட விரும்​பாமல், எம்.ஜி.ஆர். ஆதரவில் 1981-ல் அரசியல் உலகில் கால் பதித்து, ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்கள் விரித்துவைத்த சதிவலையை அறுத்தெறிந்து, அவர்களால் இழைக்கப்பட்ட அவமானங்களை சகித்துக்கொண்டு, அ.தி.மு.க-வை உங்கள் அசைக்க முடியாத தலைமையின் கீழ் கொண்டுவந்தீர்களே... அந்த அரிய சாதனை உண்மையிலேயே வியப்புக்கு உரியது!
உங்களுடைய விரிந்த வாசக ஞானம், தெளிந்த ஆங்கிலப் பேச்சு, தளராத தன்னம்பிக்கை, அபூர்வமான அரசியல் ஆளுமை, சர்க்கஸ் கூடாரத்தின் ரிங் மாஸ்டரைப்போல் உங்கள் கட்சியின் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் அசாத்திய ஆற்றல் அனைத்தும் நீங்கள் வளர்த்துக்கொண்ட பலமான பாது​காப்பு அரண்கள். எம்.ஜி.ஆர். கை தூக்கிவிட்டதனால்​தான் அரசியலில் நீங்கள் இந்த உயரத்தை எட்ட முடிந்தது என்பது பிழையான கருத்து. சரோஜாதேவியும், லதாவும் எம்.ஜி.ஆரே விரும்பி அரசியலில் ஆளாக்க முனைந்து இருந்​தாலும், உங்களைப்போல் உருவாகி இருக்க முடியாது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்பு உங்கள் தலைமை வாய்த்திருக்காவிட்டால், அ.தி.மு.க. ஓர் அரசியல்சக்தியாக நீடித்திருக்காது என்பதும் நிஜம்.
எல்லாம் சரி. ஆனால், ஒரு கோட்டை எவ்வளவு பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், அதற்குள் சில பலவீனங்கள் புலப்​படுவது இயல்பு. உங்கள் பலங்களுக்கு சமமாக பலவீனங்களும் பாதித்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? 'பரிசோதிக்கப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது’ என்றார் சாக்ரடீஸ். நீங்கள் பரிசோதித்துப் பார்த்து, பள்ளத்தில் வீழ்த்தும் பலவீனங்களில் இருந்து விடுபட விரும்பாததுதான் வேதனைக்கு உரியது.
காமராஜரைப்போலவோ, கலைஞரைப்​போலவோ படிப்படியாக அரசியலில் நீங்கள் வளர்ந்தவர் இல்லை. உங்கள் அரசியல் பிரவேசம் 1981-ல் அரங்கேறியது. உடனே அ.தி.மு.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாள​ராக உயர்த்தப்பட்டீர்கள். 1988-ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றினீர்கள். 1989 தேர்தலுக்குப் பின்பு தமிழக சட்டமன்ற வரலாற்றில் எதிர்க் கட்சித் தலைவராக அமர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றீர்கள்.  நிதி நிலை அறிக்கையை முதல்வ​ராக நின்று சட்டமன்றத்தில் கலைஞர் சமர்ப்பித்தபோது, நீங்கள் உருவாக்கிய கலவர நாடகத்தில் நேர்ந்த விபரீதக் காட்சிகளின் விளைவாக, மக்களின் அனு​தாபத்தைப் பெற்று 1991-ல் கோட்டையில் முதல்வராகக் கொலுவீற்றீர்கள்.
யாருக்கும் எளிதில் கிடைக்காத வரம் தமிழக வாக்காளர்களால், உங்களுக்கு எளிதாக வழங்கப்பட்டது. எளிதில் கிடைக்கும் எதுவும் பெரிதாகப் போற்றப்படுவது இல்லை. வாக்காளர்கள் விருப்பத்தோடு வனைந்து கொடுத்த பதவிக் குடத்தை நீங்கள் நந்தவனத்து ஆண்டி​யைப்போல் கூத்தாடிப் போட்டு​டைத்தீர்கள். மக்களால் தேர்ந்​தெடுக்கப்பட்ட தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் நீங்கள். நேர்த்தியாக உங்கள் நிர்வாகம் நடந்திருந்தால்... கலைஞர் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பே கனிந்து இருக்காது. அவருடைய குடும்பமும், பரிவாரமும் கோடிக் கோடி​யாய்ப் பணத்தைக் குவிக்கும் சந்தர்ப்பம் பிறந்திருக்காது. கலைஞரின் குடும்பம் உங்களுக்​குத்தான் அன்றாடம் நன்றி சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக, ஆ.ராசா உங்களுக்கு நிரம்பவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்.
'அறிவியல்பூர்வமாக ஊழல் செய்தவர் கலைஞர்’ என்று சர்க்காரியா சொன்னதை உரத்த குரலில் ஊர் ஊராய் முழங்கிய நீங்கள், ஊழலின் நிழல் படாத உன்னதமான ஆட்சியை வழங்கிவிடவில்லை. அதிகாரத் துஷ்பிரயோகம், ஆணவப் போக்கு, சொத்துக் குவிப்பு, ஊழலில் திளைத்த அமைச்சர் குழு, விமர்சனங்​களை விரும்பாத சர்வாதிகாரச் சாயல், பழிவாங்கும் மனோபாவம் போன்றவை வாக்காளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதால், உங்கள் மீது இருந்த நம்பிக்கை நலிவடைந்​தது. 'ஸ்பிக்’ விவகாரத்தில் உங்கள் விருப்பத்துக்கு வளைந்து கொடுக்காத ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகாவின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டதன் பின்புலம் அறியாமல் தமிழகம் அதிர்ந்தது. தி.மு.க. வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தின் மீது நடத்தப்பட்ட கொடுமையான தாக்குதலின் பின்னணி புரிந்ததும் நல்ல அரசியலை நாடுவோர் நெஞ்சம் நடுங்கியது. எல்லா​வற்றுக்கும் சிகரம்போல் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் அமைந்துவிட்டது. உங்கள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நீங்கள் நடத்திவைத்த திருமணத்தில் பளிச்சிட்ட ஆடம்பரம் பாமர மக்களைக்கூட முகம் சுளிக்கவைத்தது. உங்கள் வீழ்ச்சி கலைஞரின் வியூகத்தில் விளைந்துவிடவில்லை. உங்களுக்கான பள்ளத்தை நீங்களே வெட்டிய விதம்தான் பரிதாபத்துக்கு உரியது.
முன்னாள் முதல்வரே... கடந்த காலத்தை இன்று நிதானமாகத் திரும்பிப் பார்த்து நீங்கள் கற்றறிய வேண்டிய பாடங்கள் கணக்கற்றவை. மிகுந்த நம்பிக்கையுடன் மக்களால் 1991-ல் ஆட்சியில் அமர்த்தப்பட்ட நீங்கள், 1996 தேர்தலில் மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டீர்கள். உங்கள் அமைச்சரவையில் இடம்பெற்ற அனைவரும் தோற்கடிக்கப்பட்டனர். நீங்களே பர்கூர் தொகுதியில் மக்கள் அறியாத ஒரு மனிதரிடம் தோற்கும் நிலை நேர்ந்தது. சரிந்துவிட்ட உங்கள் அரசியல் செல்வாக்கை முற்றாக முடித்துவிட முதல்வர் பொறுப்பேற்ற கலைஞர் காரியத்தில் கண்வைத்தார். உங்கள் மீது 40-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு விரைவாக உங்களை சிறைக்கு அனுப்பிவைக்க அடித்தளம் அமைக்கப்பட்டது. கலைஞர் கண்ட கனவு நனவானது. நீங்கள் சில காலம் சிறைவைக்கப்பட்டீர்கள். 'டான்சி’ வழக்கு உங்கள் உறக்கத்தைக் கலைத்தது. சொத்துக் குவிப்பு வழக்கு 'விடாது கருப்பு’ என்பதுபோல் இன்று வரை தொடர்ந்து உங்களைத் துன்புறுத்துகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76 லட்சம் கோடியை நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுத்திய 'நேர்மையானவர்கள்’, நீங்கள் 60 கோடி சேர்த்துவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை போனதும், இன்று வரை கூச்சம் இல்லாமல் உங்கள் ஊழல் குறித்து வக்கணையாக விமர்சிப்பதும் வேறு கதை.
ஒரே ஒரு ரூபாய் தவறாகப் பெற்றாலும் ஊழல்... ஊழல்தான். யார் செய்தாலும் ஊழல் தண்டனைக்கு உரியதுதான். ஐந்து ஆண்டு ஆட்சியில் நீங்கள் செய்த தவறுகள் மொத்தமாக முற்றுகையிட்டு உங்களை அடியோடு வீழ்த்தியதும், உங்கள் அரசியல் வாழ்வு அஸ்தமித்துவிட்டது என்றே அனைவரும் ஆரூடம் கணித்தனர். 'ஒழிந்தார் ஜெயலலிதா; அழிந்தது அ.தி.மு.க.’ என்று மகிழ்ந்தது கலைஞரின் பரிவாரம்.
'ஃபீனிக்ஸ் பறவை தன் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழும்’ என்பது நிஜம் அல்ல. ஆனால், அரசியல் உலகம் அதிசயிக்கும் வகையில் உங்கள் சாம்பல் மேட்டில் இருந்து நீங்கள் உயிர்த்தெழுந்ததுதான் நிஜம். உங்கள் தவறுகளைத் தமிழகத்து மக்கள் மிகவும் பெருந்​தன்மையுடன் மன்னித்து மீண்டும் ஆட்சி நாற்காலியில் அமரச் செய்தார்கள். 140 தொகுதிகளில் நின்று 132 தொகுதிகளில் வென்று, தனிப்பெரும்பான்மையுடன் நீங்கள் அரசை அமைத்தீர்கள். உங்களோடு கூட்டணி சேர்ந்தவர்கள் 64 தொகுதிகளில் வெற்றிக் கனியைப் பறித்துச் சுவைத்தனர். ஆடம்பர மணவிழா, 'சகோதரி’ சசிகலாவின் குடும்ப அத்துமீறல், டான்சி நிலப் பேரம் என்ற குறைகளை எல்லாம் புறந்தள்ளி 234 தொகுதிகளில் உங்கள் கூட்டணிக்கு 196 எம்.எல்.ஏ-க்களை வழங்கிய வாக்காளர்கள் உங்களிடம் எதிர்பார்த்தது ஒன்றே ஒன்றுதான்... நல்லாட்சி! அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நீங்கள் நடந்துகொண்டீர்களா சகோதரி? மருத்துவர் ராமதாஸைப்போல் அரசியல் ஆதாயத்துக்காக 'அன்புச் சகோதரி’ என்று நான் அழைக்கவில்லை.
சட்டமன்றத் தேர்தல் 2001-ல் நடந்தபோது நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தீர்கள். அது ஒரு தவறான நடவடிக்கை. தேர்தலில் உங்கள் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க. ஆட்சி​யைக் கைப்பற்றியதும் நீங்கள் முதல்வராக முயன்றது இரண்டாவது தவறு. கிரிமினல் வழக்கில் இரண்டு ஆண்டு​களுக்குக் குறையாமல் சிறைத் தண்டனை பெற்றவர்கள் முதல்வராக முடியாது என்பது சட்டம். ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து தமிழகத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஃபாத்திமா பீவி உங்களை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார். தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தலில் நிற்க முடியாமல் தடுக்கப்பட்ட முதலமைச்சர் நீங்கள் ஒருவரே. ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட முதல்வரும் நீங்களே. கலைஞருக்குள்ள சாமர்த்தியம் உங்களுக்கு சாத்தியப்படவில்லை. அதனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்பு நீங்கள் பதவியில் இருந்து விலகிப் பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினீர்கள். யாருக்கு எப்போது எது கிடைக்கும் என்று யார்தான் அறிவார்? வீதியில் விளையாடிய கரிகாலன் கழுத்தில் யானை மாலையிட்ட கதையை எம் கண் முன்னால் நிகழச் செய்தவர் நீங்கள். நான்கு மாதங்கள் முதல்வர் நாற்காலியில் பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தாலும், பின்னால் இருந்தபடி பரிபாலனம் செய்தது நீங்கள்தானே சகோதரி!
ஒருவழியாக சட்டம் எழுப்பிய தடுப்புச் சுவரைத் தகர்த்துவிட்டு, ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியைத் தன்னிடம் தக்கவைத்துக்​கொள்வதில் நீங்கள் காட்டிய முனைப்பு, அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்குக்கூட எளிதில் கைவராதது! நீங்கள் மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததே அரிய சாதனைதான். ஆனால், அதன் மூலம் மக்கள் அடைந்த பயன் என்ன? உங்களைச் சிறைக்கு அனுப்பிய கலைஞரை நீங்கள் சிறைக்கு அனுப்ப நாள் குறித்து நள்ளிரவில் கைது செய்து, மக்கள் அனுதாபத்தை அவர் பக்கம் திருப்பும் திருப்பணியில்தானே ஈடுபட்டீர்கள்!
உங்களுக்குப் பிரச்னை கலைஞர். கலைஞருக்குப் பிரச்னை நீங்கள். உங்கள் இருவர் கால்களிலும் மாறி மாறி மிதிபடுவது மக்கள். 'விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என் செய்ய நினைத்தாய்?’ என்று சரியாகத்தான் புலம்பினான் பாரதி.
உங்களுடைய அசைக்க முடியாத பலம் அபாரத் தன்னம்பிக்கை. அதுவே சில நேரங்களில் வரம்பு கடந்து பிறர் பார்வையில் தலைக்கனமாய் தரிசனம் தரும்படி நடந்துகொள்வதுதான் உங்களது மோசமான பலவீனம். ஜனநாயக அமைப்பில் விமர்சனங்களை ஆரோக்கியமாக நேர்கொள்ளும் தன்மை மிக முக்கியம். தமிழகத்தில் உள்ள ஆறரைக் கோடி மக்களும் பன்னீர்செல்வம், செங்கோட்டையன்போன்று கை கட்டி, வாய் பொத்தி, முதுகு வளைந்து 'அம்மா’ என்று ஆராதிக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதுதான் தவறு. ஊடகங்கள் அனைத்தும் ஒத்தூத வேண்டும் என்ற விருப்பம் கலைஞரைப்போல் உங்களுக்கும் உண்டு. 'இந்து’ நாளிதழ் உங்கள் சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கைகள் குறித்துக் கட்டுரை தீட்டியதற்காக என்.ராம் உட்பட ஆறு பேரை கைது செய்ய முயன்றது சரியான நடவடிக்கையா என்று இப்போது சிந்தியுங்கள். பல்வேறு இதழ்கள் மீது வழக்குப் பதிவு செய்த உங்கள் செயல் பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது இல்லையா?
அரசு ஊழியர்கள் 2003-ல் ஓய்வூதியச் சலுகைகளுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது ஒரு துளி மையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரை வேலை நீக்கம் செய்ததும், இரவில் வீடு புகுந்து அவர்களைக் கள்வர்கள்போல் கைது செய்ததும், சாலைப் பணியாளர்கள் வாழ்வோடு விளையாடியதும்தான் உங்கள் வீழ்ச்சிக்கு வியூகம் அமைத்ததை இப்போதாவது உணர்ந்துவிட்டீர்களா? அப்போது 'அரசு ஊழியர்களை அழைத்துப் பேச வேண்டும்; அன்பால் சாதிக்க வேண்டும்’ என்று உங்களுக்கு அருளுரை வழங்கிய கலைஞருடைய இப்போதைய ஆட்சியில், அதே அரசு ஊழியர்கள் காவல் துறையால் நடுவீதியில் கடுமையாகத் தாக்கப்பட்டனர் என்பது தனியரு கொடுமை!
திருமங்கலம் தேர்தல் பாணி குறித்துக் கடுமையாக விமர்சிக்கும் நீங்கள்தான், உங்கள் ஆட்சியில் இடைத்தேர்தல்கள் நடந்தபோது, அமைச்சர்களின் படையெடுப்பை அறிமுகப்படுத்தினீர்கள். சென்னை மாநகராட்சி இடைத்தேர்தலில் விதிமுறைகளை மீறி உங்கள் தொண்டர்கள் செயல்பட்டபோது நீங்கள் வேடிக்கை பார்த்தீர்கள். சாத்தான்குளம் இடைத்தேர்தலில் நிர்வாக எந்திரத்தை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தினீர்கள். வாக்காளர்களுக்கு 'அன்பளிப்பு' தரும் 'ஜனநாயகக் கடமை’யை நீங்களும் செய்தீர்கள். கலைஞரின் குடும்பம் குறித்துப் பேசும்போதெல்லாம், சசிகலா குடும்பம் உங்கள் நினைவில் நிற்பதில்லை. திரைப்பட உலகில் தேவைக்கு மேல் நீங்கள் சொத்து சேர்த்தாயிற்று. உங்களுக்கென்று தனியாக ஒரு குடும்பம் இல்லை. 'தத்துவஞானிகள் ஆளவேண்டும். அவர்களுக்குக் குடும்பம் கூடாது’ என்றார் பிளேட்டோ. அந்த வரம் உங்களுக்கு இயல்​பாக வாய்த்திருந்தது. ஒரு செப்புக் காசும் நேர்மை தவறிச் சேர்க்காமல் ஊழலற்ற நிர்வாகத்தை நீங்கள் நினைத்திருந்தால், தமிழக மக்களுக்குத் தந்திருக்க முடியும். சசிகலா குடும்பம் உங்கள் கால்களை நேர் வழியில் நடக்கவிடாமல் பிணைத்திருக்கும் இரும்புச் சங்கிலி என்று நீங்கள் இப்போதேனும் உணர்ந்தீர்களா?
போகட்டும். உங்கள் 10 ஆண்டு ஆட்சியில் நல்லதே நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. கந்துவட்டிக் கொடுமையில் இருந்து ஏழைகளைக் காப்பாற்றிய நடவடிக்கை, பாமர மக்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டிய லாட்டரி சீட்டுக்குத் தடை விதித்த நற்செயல், வீரப்பன் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் வெளிப்படுத்திய துணிச்சல், காஞ்சி சங்கராச்சாரியாரைக் கைது செய்ததில் காட்டிய கண்டிப்பு, மழை நீர் சேகரிப்பில் மக்களை ஈடுபடுத்திய ஆளுமை, கலைஞரால் கை கழுவப்பட்ட வீராணம் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிச் சென்னையின் தாகம் தவிர்த்த ஆட்சித் திறன், தாய்மை உணர்வுடன் தொடங்கிய தொட்டில் குழந்தைத் திட்டம் மூலம் வெளிப்படுத்திய சமூகப் பார்வை, கல்வி வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு பள்ளிப் பிள்ளைகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய கருணை போன்றவற்றுக்காக நிச்சயம் நீங்கள் பெருமைப்படலாம். உங்கள் ஆட்சியின் சிறப்பு அம்சமாக மக்கள் மறவாமல் நினைப்பது சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு. கட்சிக்காரர்கள் அதிகாரம் செலுத்தும் கொத்தடிமைக் கூடங்களாக காவல் நிலையங்கள் கழிந்துபோக நீங்கள் அனுமதித்தது இல்லை!
சகோதரி... நீங்கள் மூன்றாவது முறை முதல்வராகும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறீர்கள். வலிமையான கூட்டணி உங்களுக்கு வாய்ப்பாக அமைந்து இருக்கிறது. வாக்காளர்களுக்கு வேறு வழி இல்லை. ஜனநாயகத்தில் நன்மை தீமைக்கு நடுவே போட்டி நடந்தால், மக்கள் நன்மையின் பக்கமே நிற்க விரும்புவார்கள். அதற்கான சூழல் இன்னும் கனியாதபோது, பெரிய தீமையைப் புறந்தள்ளிவிட்டு, சிறிய தீமையைத்தான் அவர்கள் தேர்ந்தெடுக்க இயலும். சாம்பல் மேட்டில் இருந்து நீங்கள் மீண்டும் உயிர்த்தெழ வாய்ப்பு உள்ளது. தேர்தல் களத்தின் ஆதரவுக் காற்றை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. அந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடிந்தால்...ஈழத் தமிழர் நலன் காக்க உண்மையான உள்ளுணர்வுடன் நீங்கள் செயற்பட வேண்டும். தமிழகத்தின் ஒரு மீனவரும் கடலில் சாவை சந்திக்காத நிலை வர வேண்டும். இலவசத் திட்டங்கள் என்னும் போர்வையில், ஏழை மக்களை ஏழை மக்களாகவே என்றும் கையேந்தும் இழிநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் காமராஜர் வழியில் உருப்படியான திட்டங்கள் தீட்ட வேண்டும். டாஸ்மாக்கை அரசுடமையாக்கிய பாவத்தைச் செய்த நீங்கள் பூரண மதுவிலக்கை வழங்க முடியாமற்போனாலும், வீதியெங்கும் பரவியிருக்கும் கடைகளைக் குறைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஊழலற்ற ஆட்சியைத் தந்து நீங்கள் உயர வேண்டும். சசிகலா சாம்ராஜ்யம் மீண்டும் எழுவதற்கு எந்த நிலையிலும் நீங்கள் இடம் அளித்துவிடலாகாது. இந்த முறை நீங்கள் தவறு இழைத்தால்... இனி வாழ்வின் இறுதி வரை ஆட்சி நாற்காலியில் அமர முடியாது என்றே உணர்ந்து செயற்படுங்கள். ஆட்சி மாற்றம் வெறும் காட்சி மாற்றமாக முடிந்துவிடக் கூடாது என்பதுதான் எங்கள் பிரார்த்தனை.
'உழுகலப்பையைப் போல் தாழ்ச்சிகொண்டவன் நான்’ என்றார் இயேசுபிரான். பணிவே நீங்கள் அணியும் மிக உயர்ந்த அலங்காரம் என்பதை மறவாதீர்கள்!
இப்படிக்கு,
நீங்கள் நிச்சயம் மாறியிருப்பீர்கள்
என்ற நம்பிக்கையுடன்,
தமிழருவி மணியன்

வெள்ளி, 4 மார்ச், 2011

ஆறாவது முறை நீங்கள் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறீர்கள்....

ஆறாவது முறை நீங்கள் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறீர்கள். நல்லது. ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன சாதித்தீர்கள்? மாநில சுயாட்சி வாங்கிக் கொடுத்து விட்டீர்களா? தமிழை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கி விட்டீர்களா? உங்களால் ஊழல் வழக்குகளுக்குள்ளான கண்ணப்பன், செல்வகணபதி, இந்திரகுமாரி, ரகுபதி, முத்துசாமி போன்றவர்களைக் கழகத்தில் சேர்க்காமல் அரசியல் ஆரோக்கியம் காத்தீர்களா? சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு மேலவையைக் கொண்டுவர நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் பத்தில் ஒரு பங்காவது தமிழை உயர் நீதிமன்ற மொழியாக்க முனைந்தீர்களா? நிர்வாக மொழியாகத் தமிழை நூறு விழுக்காடு நடைமுறைப்படுத்தி விட்டீர்களா? 'உணவு, உடை, குடியிருப்பிடம் எனும் மூன்று அடிப்படைத் தேவைகளைக்கூட 17 ஆண்டு ஆட்சிக்குப் பிறகும் நிறைவேற்றிக் கொடுத்திட இயலாத காங்கிரஸ் ஏன் ஆட்சியில் நீடிக்க வேண்டும்?’ என்று கேட்டார் அண்ணா... அதையே உங்களிடம் நாங்கள் கேட்கிறோம். ஊழலற்ற ஆட்சிக்கும் உங்களுக்கும் என்றாவது தொடர்பிருந்ததுண்டா?

ஈழத் தமிழர் நலன் காக்கத் தவறிய நீங்கள் ஆட்சியில் நீடிப்பதால், உலகத் தமிழருக்கு என்ன நன்மை? தாயக மீனவர் மீது நடக்கும் தாக்குதலைத் தடுக்க முடியாததும் உண்மை தானே! வீதிக்கு வீதி மதுக்கடை திறந்து ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழை மக்களை மயக்கி வாங்கி, இலவச நாடகம் நடத்தி அதே மக்களிடம் பிச்சைக்கார மனோபாவத்தை வளர்க்கும் உங்களுக்கு ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று லட்சக்கணக்கான மகளிர் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா? நீங்களும், உங்கள் வாரிசுகளும், கழக உடன்பிறப்புகளும் அதிகாரத்தைத் தொடர்ந்து சுவைக்கவும், சொத்துகளை எல்லையின்றிக் குவிக்கவும், மணற் கொள்ளையிலிருந்து அரிசிக் கடத்தல் வரை அமோகமாக நடத்தவும் 'திருமங்கலம் ஃபார்முலா’வை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். எந்தப் பணத்தை நம்புகிறீர்களோ அது தான் உங்கள் காலையும் வாரப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்!