வியாழன், 7 ஜூன், 2012

பிட் பிட் பிட்டுகள்..... 3

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் அபூர்வமான நாள்அந்த நாள் மாமனிதர் மொரார்ஜி தேசாயின் பிறந்த நாள்எனும்போது அந்நாளுக்கான முக்கியத்துவமும் மரியாதையும் இன்னும் கூடி விடுகிறது.,,,.1977-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி, 81வயதான மொரார்ஜி தேசாய் இந்தியாவின் நான்காவது பிரதமராகப் பொறுப்பேற்றார்பதவி ஏற்றவுடன் அவசரநிலைக்காலக்கொடுமைகளை நீக்கிஜனநாயகத்தை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். அடிப்படை  உரிமைகள்,  பத்திரிகைச்சுதந்திரம்அரசியல் கட்சிகளின் சுதந்திரமான செயல்பாடு மற்றும் தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை மீட்டெடுத்தார். 44-வது அரசியல்சட்டத் திருத்தத்தின் மூலம் இந்திய அரசியலமைப்புக்கு ஏற்பட்ட  ஊறுகளைக் களைந்தார்.   857 நாள்கள் மட்டுமே ஆட்சியில்இருந்தாலும்அவருடைய ஆட்சிக்காலம் கடும் பஞ்சங்களையும்,   இயற்கைச் சீற்றங்கள் பலவற்றைவும் எதிர்கொள்ளவேண்டியிருந்தபோதிலும்  மக்கள் எந்த வகையிலும் இன்னல்  அனுபவிக்காவண்ணம்  மிகச்சிறப்பானநிர்வாகத் திறமை மிகுந்த,ஊழலற்றநேர்மையானதூய்மையான ஆட்சியை மக்களுக்குத் தந்தார்.இந்தியாவின் உயரிய விருதான "பாரத ரத்னா'வையும்அதற்குஇணையான பாகிஸ்தானின் "நிஷான்--பாகிஸ்தான்'   என்ற  விருதையும்  பெற்ற ஒரே இந்தியர் மொரார்ஜி தேசாய்............. தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது ; யாவரும் கவனிக்கவில்லைஎனில் உண்மை பொய் ஆகாதுமக்கள் துணையின்றியும் உண்மை நிலைத்து நிற்கும்தன்மையுடையதுமகாத்மா காந்தி........................... நித்திரையில் இருக்கும் தமிழா!சித்திரை இல்லை உனக்குப்புத்தாண்டு அண்டிப்பிழைக்கவந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததேஅறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்..                தரணி ஆண்டதமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு...பாவேந்தர் பாரதிதாசன்........கருணாநிதியைப் பற்றி, ஒரு கருத்து சொல்வர். அவர் எதிர்க்கட்சியிலிருந்தால், தமிழ் மக்கள் நலனுக்காக ஓங்கி குரல் கொடுப்பார். ஆனால், ஆட்சிக்கு வந்து விட்டால், தம் மக்கள் நலனுக்காக மட்டுமே செயல்படுவார். இறுதிக்கட்ட போர், 2009ல் ஆரம்பித்திருந்தது, ராஜபக்ஷே அரசு. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, ஆயிரக்கணக்கில் தமிழர்களை கொன்று குவித்தது. இந்திய , அரசின் ஆதரவுடனும், மறைமுக ஆயுத  உதவிகளுடனும் தான், தமிழர்களுக்கெதிரான இந்த யுத்தம் நடத்தப்பட்டது. இந்த வேளையில், தமிழகத்தில் ஆட்சியிலிருந்த கருணாநிதி, தனது ஆதரவுடன் மத்தியில் ஆட்சியிலிருந்த பிரதமருக்கும், சோனியாவிற்கும் தகுந்த முறையில் நிர்பந்தங்கள் கொடுத்திருந்தால், போரின் வேகம் குறைந்திருக்கும். இலங்கையில் போர் நிறுத்தப்படாவிட்டால், மத்திய அரசுக்கான ஆதரவு வாபஸ் பெறப்படும் என கூறி, அதற்கான நடவடிக்கைகளில் கருணாநிதி இறங்கியிருந்தால், பதறிப்போய் சோனியா, இலங்கையை போர் நிறுத்தம் செய்ய வைத்திருப்பார். ஆனால், நான்கு மணி நேர உண்ணாவிரதம், தனது கட்சி எம்.பி.,க்களிடம் ராஜினாமா கடிதங்களை வாங்கி, அதை சபாநாயகருக்கு அனுப்பாமல் தானே வைத்துக் கொண்டது. என, கோமாளிக் கூத்துகளை நடத்திக் கொண்டிருந்தார் கருணாநிதி. தான் மற்றும் தனது குடும்பத்தினர்களும் பதவிகளில் நீடிக்க வேண்டும் என்பதற்காக, அவர் செய்த, இந்த தமிழின துரோகச் செயலால், ஐ.மு.கூ., அரசு தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காததோடு, ராஜபக்ஷே அரசுக்கு, மேலும் போருக்கான உதவிகளையும் செய்து வந்தது. முள்ளிவாய்க்கால் படுகொலையில், ஒரே நாளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது கருணாநிதி, தன் குடும்பத்தோடு டில்லிக்கு சென்று தன் மகன், மகள், பேரன், பேத்திகளுக்கு பணம் சம்பாதிக்க, வசதியான, மத்திய அரசின் இலாகாக்களை பெறுவதற்காக, சோனியாவோடு பேரம் நடத்திக் கொண்டிருந்தார். இலங்கையில் தமிழினம் அழிக்கப்பட்டது; இங்கே கருணாநிதி தன் குடும்பத்தினருக்கு பணம் கொழிக்கும் இலாகாக்களை பெறுவதில் வெற்றி பெற்றார். பதவி பறிபோன பின், வீட்டுக்குள் முடக்கப்பட்டிருக்கும் இந்த நாளில், தமிழர் பாசம் மீண்டும் பொங்கி வருகிறது.பதவி நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, அதிகார மயக்கத்தில் இன உணர்வை மறந்துவிட்ட கருணாநிதி, இப்போது தமிழீழ தாகம் கொண்டவராக மாறிவிட்டார். இன உணர்வும், தமிழ்ப் பற்றும் கொண்ட போராளியாய் கருணாநிதி இறுதிவரை இருக்க வேண்டும் என, தமிழக வாக்காளர்கள் விரும்பினால், மறந்தும், அவரை முதல்வராகவோ, தி.மு.க., ஆளும் கட்சியாகவோ மீண்டும் கொண்டு வர முயலக் கூடாது. ….கருணாநிதி, தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் என்ன லாபம் என்ற ஒரே நோக்கத்துடன் தான் திட்டம் தீட்டுவார்.  ……   யானைகளின் வாழ்வாதாரங்களை மனிதன் ஆக்கிரமித்து, அழிக்கத் துவங்கியதே, இன்று யானைகள் காடுகளை விட்டு ஊருக்குள் வருவதற்கு காரணம். மலைப் பிரதேசங்களை, சுயநல அரசியல்வாதிகள் கூறுபோட்டு ஆக்கிரமித்ததாலேயே, யானைகள் வழித் தடங்கள் மறைந்து, ஊருக்குள் இரை தேடி வர ஆரம்பித்தன. அரசியல் சாசனத்தின்படி, ஒரு மாநில அரசு, தன் மாநிலத்தில் வசிக்கும் மக்களையும், விலங்குகளையும் பராமரிக்கவும், பாதுகாப்பு அளிக்கவும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை இரண்டும் இன்று கடைபிடிக்கப்படாத காரணத்தால் தான், யானைகளால் மக்களுக்கும், மாவோயிஸ்டுகளால் அரசு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையூறுகள் ஏற்படுகின்றன.மாவோயிஸ்டுகள் ஊழல் அரசியல்வாதிகள் அதிகாரிகள்  மீது தங்களது கோபத்தை வெளிப்படுத்தினால், அதற்கு பொதுமக்கள் வருத்தப்பட மாட்டார்கள்.                       நீதிபதி. தீர்ப்பில் அவர், "ஊழல் என்பது விபசாரத்தை விட மோசமானது. விபசாரம் தனிமனித ஒழுக்கத்தைத் தான் பாதிக்கிறது. ஆனால், ஊழல் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒரே அளவில் சீரழித்து விடுகிறது. ஊழல், நாட்டுக்கு பகை. மனிதர்களை இது கோபத்துக்கு ஆளாக்குகிறது. இந்த சமூகம் ஊழலுக்கு எதிராக வெளிப்படையாக குரல் கொடுக்கிறது. ஆனால், தனிப்பட்ட முறையில் அதில் ஈடுபடுகிறது. சரியான நேரத்தில், சரியானவற்றை அடைவதற்கு கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்' என்று குறிப்பிட்டுள்ளார்…..  மக்களின் காலில் விழுந்து ஓட்டு பெற்று, எம்.எல்.ஏ., ஆனவர்கள், சட்டசபையில் மக்கள் சார்பில் பேசுவதில்லை. ஏதோ தங்கள் கட்சித் தலைமையால் தான் எம்.எல்.ஏ., ஆனதாக நினைத்துக் கொண்டு, சட்டசபையில் தங்கள் கட்சித் தலைவரைப் புகழ்ந்தும், எதிர்க்கட்சியினரை இகழ்ந்தும், கிடைக்கும் ஓரிரு நிமிடங்களையும் வீணடிக்கின்றனர்.அமைச்சர்கள் சினிமா பாடல்களை பாடுவதும், முதல்வர் அதை திருத்தியமைப்பதும், ரசிப்பதும் சட்டசபையின்,அன்றாட  நிகழ்ச்சி நிரலாகி விட்டது. சட்ட மசோதாக்கள் மீது, ஆழமான கருத்துரைகளை , நேர்மையுடன்   விவாதங்கள் செய்யப்பட்டு  மக்களிடம் நற்பெயரை எடுக்க முயற்சி  செய்யவும்.இல்லா விட்டால்  காலில் விழுந்தாலும்  ஓட்டு கண்டிப்பாக கிடைக்காது…………//////கியாஸ் பதிவு செய்ய தற்போது ஐ.வி.ஆர்.எஸ். முறையில் எஸ்.எம்.எஸ். அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஆங்கிலத்தில் /////IOC 22485990  15580  TO 8124024365    SMS……அனுப்பவும்….. ……………………………..காங்கிரஸ் செய்த சாதனை பாரிர் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்திய ரூபாய்.. 
 1947  ......1$ =1 Rs       1952  ....1$.=5 Rs       1991  ......1$=17 Rs       2000 .....45 Rs       2012  ........1$=56  Rs ………………… ………….மத்தியில் ஆளும் காங்., தலைமையின் கண் அசைவில், சி.பி.ஐ., செயல்புரிகிறது என்பது, சமீபத்தில் வெளிவந்த சி.பி.ஐ., கோர்ட்டின் தீர்ப்பின் மூலம் கண்கூடாக தெரிகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன், பா.ஜ., தலைவர் பங்காரு லட்சுமணன், வெறும் ஒரு லட்சம் லஞ்சம் பெற்றதற்கு, அவருடைய தள்ளாத வயதில், நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. தவறு செய்தவர் தண்டிக்கப்பட வேண்டியவர் தான். இந்த முடிவு சரியான முடிவே! ஆனால், ஏன் இதே நடைமுறையை, போபர்ஸ் வழக்கில் கடைபிடிக்கவில்லை? வலுவான ஆதாரங்கள் இருந்தும், குற்றவாளியான குவட்ரோச்சியை தப்பிக்கவிட்டது ஏன்? ஆட்சியாளர்களின் கண்டிப்பால், அவர்களை திருப்திப்படுத்த வேண்டி, வழக்கின் உண்மையை வெளிக் கொணராமல், வழக்கை முடித்தது ஏன்? இது எந்த வகையில் நியாயம்? இதேபால், "2ஜி' ஊழல் வழக்கில், நிறைய ஆதாரங்கள் இருந்தும், இது நாள்வரை, பலர் கைது செய்யப்படாமல் உள்ளனர். இவற்றை பார்க்கும்போது, "2ஜி' வழக்கும் ஒரு நாடகமாக அமைந்து, பூஜ்ஜிய வழக்காக மாறுமோ என்று அச்சமாக உள்ளது. இதுபோன்ற ஆட்சியாளர்கள் இருக்கும் வரை, இந்தியா வல்லரசாக மாறி, மக்களின் வாழ்வாதாரம் உயர்வது எப்போது? சாதாரண மக்களின் நியாயம் காப்பாற்றப்படுவது எப்போது? சி.பி.ஐ., எப்போது அதன் தனித்தன்மையுடன் செயல்படும்?............... பிரதான எதிர்க் கட்சியான பா.ஜ.க.வில் பிரதமர் பதவியை ஏற்க மூத்த தலைவர்களிடையே  போட்டி இருக்கிறது. ஒரு சில மாநிலங்களைத் தவிர பெரும்பாலான மாநிலங்களில் அந்தக் கட்சிக்கு செல்வாக்கு இல்லை.காங்கிரஸ் கட்சிக்கு அந்தந்த மாநிலங்களில் சிறிது பின்னடைவு ஏற்பட்டாலும் ஒட்டுமொத்தமாக காங்கிரசைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு நாடு முழுக்க செல்வாக்கு பெறும் நிலையில் எந்தக் கட்சியும் இல்லை.ஆகவே  2013-ம் ஆண்டிலேயே மக்களவைத் தேர்தலை நடத்திவிட காங்கிரஸ் முயல்வதாகத் கூறப்படுகிறது........ பி.எஸ்.என்.எல்., நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதன் நிதி ஆதாரம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக மத்திய அரசும், பி.எஸ்.என்.எல்., நிறுவனமும் அறிவித்துள்ளது. ஆனால், நிதி ஆதாரத்தையும், நிறுவனத்தையும் மேம்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை..ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியபோது அந்த துறையை லாபத்தில் செயல்பட அனைத்து அரசு அதிகாரிகளும், பொதுத்துறை அதிகாரிகளும், பிரநிதிநிதிகளும் ஏர் இந்தியாவில்தான் பயணம் செய்ய வேண்டும் என தெரிவித்தது. அதேபோல், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தையும் லாபத்தில் செயல்படவும், நிதி ஆதாரத்தை பெருக்கவும், மத்திய, மாநில அரசு பிரதிநிதிகள், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுடைய அனைத்து தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகளை பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் மட்டுமே பெற வேண்டும் என உத்தரவிட வேண்டும். இப்போது பொதுத்துறை நிறுவனங்கள்  தனியார் தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகளை உபயோகபடுத்தி வருகின்றன. ………..,   ……………… ஏமாற்றுவதால் எதையும் செய்து விட முடியாது. அன்பாலும், ஆர்வத்தாலும், ஆன்மிக சக்தியாலுமே பெரிய செயல்களை நிறைவேற்ற முடியும். ..... விவேகானந்தர்………….    ஆட்சி பீடத்தில் இருப்பவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினால், அது நியாயமானதாக இருந்தாலும்கூட மக்களிடையே செல்வாக்கை இழக்கச் செய்துவிடும். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது ஆட்சிபீடத்தின் மீது காட்டும் சினம், மக்கள் குரலாகப் பார்க்கப்படும். ஆட்சிபீடத்தில் இருந்துகொண்டு காட்டும் சினம், நியாயமான சினமாக இருந்தாலும், அதிகார மமதையாகத்தான் பார்க்கப்படும்.தமிழகத்தை எடுத்துக் கொண்டால் நிலப்பறிப்பு வழக்கு தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க இன்றைய தமிழக முதல்வர் விரும்பினாலும், வழக்குப் பதிவேடுகள் அனைத்திலும் சட்டத்தின் ஓட்டைகள்! ஆட்சி மாறினால், ஒரே மாதத்தில் இந்த வழக்குகள் தள்ளுபடியாகிவிடும். ஊழல் செய்த எந்த அமைச்சர் மீதும், அவர் சார்ந்த துறையின் ஊழல் தொடர்பாக ஒரு வழக்குகூடப் பதிவு செய்யப்படவில்லை. அதிகாரிகளும் சரி, காவல்துறையினரும் சரி, முன்னாள் ஆட்சியாளர்களின் பகையைச் சம்பாதித்துக் கொள்ளாமல் நடவடிக்கை எடுத்ததைப்போல நடிப்பார்கள் என்பது நடைமுறை உண்மை……….ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருக்கும் போது லஞ்சம், ஊழலில் ஈடுபட்டுவிட்டு, பிடிபட்டு கோர்ட்டுக்கு செல்லும் போதும், தண்டனை விதிக்கும் போதும், வயதை காரணம் காட்டுவதும், உடல்நிலையை காரணம் காட்டுவதும் வேதனையாக உள்ளது.மாட்டாத வரை, மமதையாகத் திரியும் இவர்களுக்கு, மாட்டிக் கொண்டால் மட்டும், நெஞ்சு வலி வந்து விடுகிறது. வயதைக் காரணம் காட்டி, நீதிபதிகளிடம் தண்டனை காலத்தை குறைத்துக் கொள்ளும்படி கெஞ்சுகின்றனர்……………… 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக