வியாழன், 7 ஜூன், 2012

பிட் பிட் பிட்டுகள் ....1

இலவசங்களும் தேர்தல் நேரத்தில் பட்டுவாடா செய்யப்படும் பணமும் பிரியாணி பொட்டலங்களும் மதுபான புட்டிகளும் தமிழக வாக்காளர்களை எளிதில்விலைக்கு வாங்குவதற்குப் போதுமானவை என்கிற அரசியல் சூத்திரத்தை அரங்கேற்றிய குற்றவாளியான கருணாநிதிக்கு, ஜெயலலிதாவைக் குறைகூற எந்த தார்மீகத் தகுதியும்கிடையாது.கருணாநிதி ஆட்சியில் இடைத்தேர்தல்களில்‘கோடிக்கணக்கான பணம்கொட்டப்பட்டது. அனைத்து அமைச்சர்களும் முற்றுகையிட்டனர். நிர்வாக எந்திரம் தவறாகப் பயன்பட்டது. தேர்தல் விதிமுறைகள் திட்டமிட்டு மீறப்பட்டன’ என்றுஅடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது ஜெயலலிதாதெரிவித்தார். இதனால்தான் பென்னாகரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.டெபாசிட்இழக்கும் அதிர்ச்சிமிக்க அனுபவத்தைக்கூட அடைந்தது....................."பட்' இதெல்லாம் இல்லாம அரசியல் பண்ண முடியாது நண்பா. தமிழ்நாட்டுத் தலைவருங்கஎல்லாம், "ஒன் பாத்ரூம்' போறதுக்குக் கூட ஒம்போது கட் அவுட்டு வெக்கணும்னுநெனைக்குறாங்க. திருட்டு ரயில் ஏறி வந்தவங்களுக்குக் கூட திரும்புன பக்கமெல்லாம் கட்அவுட்டு வெக்குற தேசத்துல பொறந்துட்டு, இதுக்கெல்லாம் சங்கோஜப்பட்டா சரித்திரம்மன்னிக்காது நண்பா.புரோட்டாவைப் பிச்சுப் போட்டு சால்னாவை ஊத்தலாமா, இல்ல சால்னாவை ஊத்தீட்டுப்பிச்சுத் திங்கலாமான்னு கூட முடிவெடுக்க முடியாதவன் எல்லாம் முக்கியப் பொறுப்புலஇருக்கிற தேசமப்பா இது. இங்க எந்திரிக்க முடியாதவன "எழுச்சி நாயகன்'னு சொல்றதும்,அஞ்சு படத்துல தலைய காட்டுனா "அடுத்த முதல்வரே'னு போஸ்டர் ஒட்டுறதும் சாதாரணம்.இன்னும் என்ன யோசனை? கேடுகெட்ட அரசியல் நமக்கு வேணுமான்னா? நீதி, நேர்மையப்பத்தி கவலைப்பட்டா சோத்துக்கு சிங்கிதான் அடிக்கணும். சுத்தமா இருந்தா, அதிகபட்சம்முக்கு ரோட்டுலயோ இல்ல, மூத்திரச் சந்துலயோ முழு உருவச் சிலை வெச்சு, ஒரு பொறந்தநாளு, செத்த நாளுன்னு வந்தா "இவர்தான் உத்தமர்'னு கத்திப் பேசுவாங்க. உத்தமர்பட்டத்தை வெச்சுட்டு, ஊறுகாயக் கூட வாங்க முடியாது நண்பா... புரிஞ்சுக்கோ.உத்தமனுகளா இருந்தா, நம்ம புள்ளைங்க ஊருக்குள்ள பிச்சை எடுத்துதான் திங்கவேண்டியிருக்கும். அந்த பட்டத்தைத் துறந்தாதான், நம்ம புள்ளைங்களும், ஊருல நாலு பேருமதிக்கிற மாதிரி, மந்திரி, சேனல் அதிபர், தொழிலதிபர்ன்னு செட்டிலாக முடியும்."பங்குச்சந்தையில நுங்கு விற்குமா?'னு கேட்டவன் எல்லாம் இன்னைக்கு பல ஆயிரம் கோடிக்குஅதிபதியா இருக்கான். ...  ................வெளிநாடுகளும் கச்சா எண்ணையை இந்தியா கொடுப்பது போன்று தான் பணம் கொடுத்துவாங்குகின்றன.ஆனால்  அந்த நாடுகள் குறைவாக வரி விதிப்பதால், இந்தியாவைவிட பெரும்பாலான நாடுகளில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது. நியூயார்க்கில்ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.44.44க்கு விற்பனை செய்யப்படுகிறது.கராச்சியில் ரூ.44.49,பீஜிங் கில் ரூ.48.05, டாக்காவில் ரூ.48.07, கொழும்பில் ரூ.53.85க்குவிற்கப்படுகிறது. ஆனால் அரசுகளின் வரி விதிப்பில் சென்னையில் ஒரு லிட்டர்பெட்ரோல் ரூ.76க்கு விற்கப்படுகிறது.   சென்னையில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.56க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரே ஆண்டில்லிட்டருக்கு ரூ.26 உயர்ந்துள்ளது....................... நெய்வேலியில் முதல் நிலை மின் நிலையத்தில், 50மெகாவாட் கொண்ட ஆறு அலகுகளும், 100 மெகாவாட் திறனில் மூன்று அலகுகளும் உள்ளனமொத்தமுள்ள 600 மெகாவாட்டில்தமிழகத்திற்கு, 475மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறதுமீதமுள்ள மின்சாரம்நெய்வேலி மின் நிலையம்குடியிருப்பு சுரங்கப்பாதைகள் ஆகியவற்றின் பயன்பாட்டுக்குஒதுக்கப்பட்டுள்ளது.
முதல் நிலையின் விரிவாக்கத் திட்டத்தில், 420 மெகாவாட் திறனில் இரண்டு அலகுகள் கொண்ட மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுஇதில்,தமிழகத்திற்கு, 226 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறதுமீதமுள்ள மின்சாரம்கர்நாடகாகேரளா மற்றும் புதுவைக்கு தரப்படுகிறதுஇரண்டாம் நிலைதிட்டத்தில்தலா 210 மெகாவாட் திறனில்ஏழு அலகுகளில், 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறதுஇதிலிருந்து தமிழகத்திற்கு, 466 மெகாவாட்மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளதுமீதமுள்ள மின்சாரம்ஆந்திராகேரளாகர்நாடகா மற்றும் புதுவை மாநிலங்களுக்கு குறைந்த சதவீதத்தில் பிரித்துதரப்படுகிறது. இரண்டாம் விரிவாக்க புதிய மின் நிலையத்தின்  இரண்டு அலகுகள் கொண்ட, 500 மெகாவாட் அனல் மின் நிலையம் கட்டப்பட்டுள்ளது..இந்த நிலையத்தின் மூலம்மொத்தமுள்ள 500 மெகாவாட்டில்தமிழகத்திற்கு 240 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும்நெய்வேலியிலிருந்துமட்டும் தமிழக மின் வாரியத்திற்குமொத்தம் 1,167 மெகாவாட் மின்சாரம்மத்திய தொகுப்பாக கிடைக்கிறதுஅடுத்த மாதம் 14 /4 /2012   முதல்புதியமின் நிலையத்திலிருந்து, 240 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும் என்பதால்தமிழகத்தில் மின்வெட்டு ஓரளவு குறையவாய்ப்புள்ளது………தமிழ்நாட்டில் ஆண்டு வருவாய் ரூ.2 லட்சம் வரை உள்ள கோயில்கள் 3331. ரூ.2 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருவாய்உள்ள கோயில்கள் 498. ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வருவாய் உள்ள கோயில்கள் 182 கெளமார மடாலயத்தில் அண்மையில் நடைபெற்றதுறவியர் மாநாட்டில் பேசிய பேரூர் ஆதீன இளையபட்டம் மருதாசல அடிகளார்இந்து கோயில்களை வாரியத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும் என்கிற கருத்தை முன்வைத்துள்ளார்அவர் சொல்ல விரும்பியதுவக்ஃபு வாரியம் போல தனியான ஒரு வாரியம் இந்துகோயில்களுக்கும் தேவை என்பதுதான்.வாரியம் அமைந்தாலும்வாரியத் தலைவரைத் தேர்வு செய்யும் பொறுப்பு தமிழ்நாட்டில் உள்ள 56மடங்களின் தலைவர்கள் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் அரசுத் தரப்பு அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து தங்களுக்குள் ஒருவரைத்தேர்வு செய்வதாக இருக்க வேண்டும்ஒவ்வோர் ஆட்சியின்போதும்அமைச்சர் பதவி கொடுக்க முடியாத நிலையில் வாரியத் தலைவர் பதவிகொடுக்கும் நடைமுறை இதிலும் தொடருமேயானால்தனி வாரியம் அமைந்தாலும் பயன் இருக்கப் போவதில்லை....2/4/2012…….போக்குவரத்துத் துறையிலும் சரிமின்வாரியத்திலும் சரி நிர்வாகச் சீர்திருத்தமும்இழப்புகளைத் தடுப்பதும் இதையெல்லாம்விடமுக்கியம் என்பதை மட்டும் நமது அதிகாரிகள் ஆட்சியாளர்களுக்குத் தெரிவிப்பதே இல்லைமுதல்வரின் பார்வைபட வேண்டிய இடம்,திறமையின்மையின் இருப்பிடமாக இருக்கும் போக்குவரத்து மற்றும் மின்வாரிய நிர்வாகத்தின்மீதுதான்கட்டண உயர்வால் மட்டும்இழப்புகள் சரிசெய்யப்பட்டுவிடாது........இலவச மின்சாரத்தைப் பயன்படுத்திபல ஏக்கர் நெல் விளைவித்துஅதைத் தன் சொந்த அரிசிமண்டியில் 400 மடங்கு லாபத்தில் விற்பனை செய்யும் பணக்கார விவசாயிக்கும் இலவச மின்சாரம்விதை நெல் வாங்கமுடியாமல்கடனுக்கு வாங்கிஅரசின் விற்பனை மையத்தில் நெல்லை விற்பனை செய்யும் ஏழை விவசாயிக்கும் இலவச மின்சாரம் என்பது எந்தவகையில் நியாயம்விழலுக்கு நீர் பாய்ச்சுவதுபோல இருக்கும் இலவச மின்சாரத்தின் பாரத்தை சராசரிக் குடிமகன் தலையில் கட்டுவதைமின்சார வாரியமும் அரசும் ஏன் தவிர்த்திருக்கக் கூடாது?................ஒரு விளக்குத் திட்டத்தின்கீழ் வரும் குடிசை வீடுகளுக்காகமட்டும் அரசு கூடுதலாக செலுத்தவுள்ள மானியம் ரூ.135 கோடிஅதாவது இந்த ஒரு விளக்கு வீடுகளில் மாலை 6 மணி முதல் காலைமணி வரை ஒரு விளக்கு எரியும்போது செலவாகும் மின்சாரம் எவ்வளவு என்பதைக் கணக்கிட்டுஇந்த வீடுகளுக்கு மின்கட்டணம்தீர்மானிக்கப்படுகிறதுஅதை அரசு மானியமாகச் செலுத்துகிறது..இந்த ஒரு விளக்கு குடிசை அனைத்திலும் இன்று விலையில்லா டிவிவந்துவிட்டதுவிலையில்லா மிக்ஸிவிலையில்லா கிரைண்டர் எல்லாமும் கொடுக்கப்பட்டுள்ளதுஇவர்கள் இந்த ஒரு விளக்குமின்கம்பியிலிருந்துதான் இவை எல்லாவற்றுக்கும் பயன்படுத்த முடியும்ஆனால்இதை ஏன் மின்வாரியம் கணக்கில் கொள்ளவேஇல்லை?......விவசாயத்திற்காக வழங்கப்படும் இலவச மின்சாரம்,வேறு வழிகளில் போகிறது  குறிப்பிட்ட அளவை விட அதிகமாக நுகர்வுசெய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்ததுஅதன் பின்கடந்த முறை ஆண்ட அரசுஇலவச மின்சார நுகர்வின் அளவைக் கணக்கிட்டுகுடிசைவீடுகளுக்கும்விவசாய பம்பு செட்களுக்கும் மீட்டர் பொறுத்த முனைந்ததுபொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளால் காட்டப்பட்ட எதிர்ப்பின் மூலம்,அத்திட்டம் கை விடப்பட்டதுவிசைத்தறிகள் விஷயத் தில் முறைகேடுகள் உள்ளனகுடிசை வீடுகள்விவசாயம் மற்றும் விசைத்தறிகளுக்கு வழங்கப்படும்இலவச மற்றும் மானியத்துக்கான தொகையைதமிழக அரசு ஈடு செய்யும் என்ற புரிந்துணர்வின் அடிப்படையில் தானேஇலவச மின்சாரம்வழங்கப்படுகிறதுதனிப்பட்ட வீட்டு உபயோக நுகர்வோர்இரண்டு மாதத்திற்குரிய கட்டணத்தை குறிப்பிட்ட நாளுக்குள் செலுத்தாவிடில்எந்தவிதமுன்னறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்படுவது போலஇலவச மின்சாரத்திற்குரிய கட்டணத்தைதமிழக அரசு குறிப்பிட்ட நாளுக்குள் செலுத்தத் தவறும்பட்சத்தில்மின்சார வாரியம் இலவச மின்சாரத்தை துண்டிக்கத் தவறுவது ஏன் என்பது புரியவில்லை.தொடர்ந்து மின்சாரம் வழங்கும் போதுமின்சாரவாரியத்திற்கு நஷ்டம் அதிகரிப்பது தவிர்க்க முடியாதது. திருட்டு மின்சாரமும்அதிக அளவில் நுகர்வு செய்யப்படுவதாக அறிய முடிகிறதுஅதையும்கண்காணித்தால்நஷ்டம் ஓரளவு குறைய வாய்ப்பு ஏற்படும்மின் கடத்தலில் ஏற்படும் இழப்பையும் குறைப்பதற்குதகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்இவற்றைக் கருத்தில் கொண்டுதமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையம்செயல்பட வேண்டும்;…………. பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் மின்சார கட்டணம் குறைவே கர்நாடகத்தில் இரண்டு மாதங்களில் 100 யூனிட் வரை பயன்படுத்தும் பயனீட்டாளருக்குயூனிட்டுக்கு சராசரியாக ரூ.2.59-ம்ஆந்திரத்தில் ரூ.2.03-ம்கேரளத்தில் ரூ.1.30-ம்மேற்கு வங்கத்தில் ரூ.3.55-ம்,மகாராஷ்டிரத்தில் ரூ.2.47-ம்குஜராத்தில் ரூ.2.55-ம்உத்தரப்பிரதேசத்தில் ரூ.3.45-ம் மின்கட்டணமாக வசூலிக்கப்படுகிறதுஆனால்,தமிழகத்தில் 100 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோர் செலுத்த வேண்டிய கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 1.10 மட்டுமே.அதேபோன்று,இரண்டு மாதங்களில் 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோர்களை ஒப்பிடும் போதுஆந்திரத்தில் யூனிட்டுக்கு சராசரியாக ரூ.2.81-ம்,கர்நாடகத்தில் ரூ.2.92-ம்மேற்குவங்கத்தில் ரூ.4.04-ம்மகாராஷ்டிரத்தில் ரூ.2.47-ம்குஜராத்தில் ரூ.2.85-ம்உத்தரப்பிரதேசத்தில்ரூ.3.45-ம் வசூலிக்கப்படுகிறதுபுதிய கட்டண விகிதப்படி 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோர் செலுத்த வேண்டிய கட்டணம்யூனிட்டுக்கு ரூ.1.80 மட்டுமே.. அரசால் மிகக் குறைந்த காலத்திற்குள் புதிய மின் திட்டங்களை கொண்டு வர முடியாதுஇதனால்பெருவாரியானமக்கள் விரும்புவதற்கேற்பஅரசு மற்றும் வங்கிகளின் பங்களிப்போடுஇந்த மானியத்தை இன்னும் சற்று அதிகப்படுத்திசூரியசக்தி கலன்களை மக்களேதங்கள் இல்லங்களில்அரசின் நேரடி கண்காணிப்பின் மூலமோ அல்லது அரசு அனுமதி பெற்ற தனியார் நிறுவனங்களின் மூலமோநிறுவிக்கொள்ளும்வகையில்உடனே அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.இதுவெறும் அறிவிப்பாக மட்டும் இல்லாமல்உடனே செயல் வடிவமும் பெற்றால்தமிழகமக்களுக்கு இதைவிட மகிழ்ச்சி வேறெதுவும் இருக்க முடியாதுதொடரும் மின்வெட்டு மற்றும் பற்றாக்குறையால் தவிக்கும் மக்களின் வாழ்வில்விளக்கேற்றுவாரா தமிழக முதல்வர்?........... நீங்க ஒண்ணும்காமெடிகீமெடி பண்ணலியே...........ராணுவ அமைச்சர் .கே.அந்தோணிமூன்று முறைமுதல்வராக இருந்தவர்தற்போது மத்திய அமைச்சராக இருப்பவர்அவரது நேர்மையும்நாணயமும்ஊழலுக்கு எதிரான அவரது தேசபக்தியும்சந்தேகத்திற்குஅப்பாற்பட்டது.ஆனால்தரக்குறைவான ராணுவ தளவாடங்களை வாங்கதனக்கு 14 கோடி ரூபாய் லஞ்சம் தர முன்வந்தனர் என்றுஒரு ராணுவ தளபதியேஅவரிடம் நேரடியாக சொன்ன பிறகும்அவர் அது குறித்து பெரிதாக கவலைப்படாமல்அலட்டிக் கொள்ளாமல்அமைதியாக இருந்தது தான்சந்தேகமளிக்கிறது.நாட்டின் பாதுகாப்பின் மீதுஅந்தோணிக்கு அவ்வளவு தான் அக்கறையா?ராணுவத்திற்கான கருவிகள்உபகரணங்கள்போர் தளவாடங்கள்வாகனங்கள்வாங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுவதுஇது முதன் முறையல்ல.நேருவின் அமைச்சரவையிலிருந்த கிருஷ்ணமேனன் முதல்ராஜிவ்வழியாகஎளிமையின் சிகரமாகப் போற்றபடும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வரைபலரும் இதுபோன்ற புகாருக்கு ஆளாகியுள்ளனர்இதில்ராஜிவின் போபர்ஸ் பீரங்கிஉலகப் பிரசித்தி பெற்ற ஊழல்."தரக்குறைவான வாகனங்களை வாங்க, 14 கோடி ரூபாய் லஞ்சம் தர முன்வந்தனர்என்று ராணுவ அமைச்சரிடம்ராணுவ தளபதிநேரில் கூறியும், "அவர் வெறும் வாய் வார்த்தைகளால் தான் சொன்னார்எழுத்து மூலம் புகார் தரவில்லைஎன்ற அந்தோணியின் பதில்மழுப்பலாகத் தான்தெரிகிறது.இன்று சி.பி.., விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ள அந்தோணிதளபதி வி.கே.சிங் தகவல் தந்தபோதே அந்த காரியத்தைச் செய்திருந்தால்கவுரவம்காப்பாற்றப்பட்டிருக்கும்அவரது நாணயமும்நேர்மையும் போற்றப்பட்டிருக்குமே!பார்லிமென்டில்இப்பிரச்னையை கிளப்பஎதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பேவந்திருக்காதே!காலம் கடந்த ஞானோதயம்கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக